இந்தியா பல நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் முக்கிய இலக்காக உள்ளது. இந்திய நிறுவனங்களிலும், இந்திய சந்தையிலும் முதலீடு செய்யப் பல நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குப் படையெடுத்து வரும் நிலையில் உலகின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட்-ன் வென்சர் பண்ட் நிறுவனமான M12 இந்தியாவிற்கு வந்துள்ளது.
M12-ன் வருகை இந்தியாவில் பல புதிய ஸ்டாட்அப் நிறுவனங்களைப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்ய முக்கியக் காரணியாக விளங்கப்போகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து பல முன்னணி வென்சர் பண்ட் நிறுவனங்கள் இந்தியா வந்துள்ள நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருகை வென்சர் பண்ட் தளத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எனத் தெரிகிறது.
இந்த M12 உலகில் 4 இடங்களில் மட்டுமே உள்ளது.
பெங்களூரு
மைக்ரோசாப்ட்-ன் வென்சர் பண்ட் நிறுவனமான M12 இதுவரை சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், லண்டன், டெல் அவ்வி ஆகிய இடங்களில் மட்டுமே இருந்த நிலையில் தனது 5வது அலுவலகத்தை மிக்பெரிய திட்டத்தோடு இந்தியாவில் பெங்களூரில் அமைத்துள்ளது.
பெரும்பாலும் இந்த நிறுவனம் B2B சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களில் தான் அதிகளவில் முதலீடு செய்யும், ஆனால் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையான இந்தியாவில் M12 வந்துள்ள நிலையில் B2C நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய முதலீடுகள்
இந்தியாவில் இதுவரை M12 நிறுவனம் ஹெல்த்டெக் தளமான இன்னோவேசர் மற்றும் B2B லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Fareye ஆகிய 2 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
தற்போது இந்தியாவிலேயே புதிய அலுவலகத்தைத் திறந்துள்ள நிலையில், M12 நிறுவனம் இந்தியாவில் அதிகளவிலான நிறுவனத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய இலக்கு
M12 நிறுவனத்தின் இந்தியத் தலைவராக Abhi Kumar பணியாற்றுகிறார். பொதுவாக இந்நிறுவனம் எண்டர்பிரைஸ் துறையில் அதிகம் முதலீடு செய்கிறது, இதேபோல் AI, பிஸ்னஸ் அப்பிளிகேஷன், இன்பரா மற்றும் செக்யூரிட்டி ஆகிய பரிவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது.
எனவே இந்தியாவில் இப்பிரிவுகளில் பணியாற்றும் நிறுவனங்களுக்கு M12 நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
கொரோனா
கொரோனா தாக்கத்தின் காரணமாக வர்த்தகத்தை இழந்து மோசமான நிலையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் M12 நிறுவனத்தின் வருகை நிம்மதியைக் கொடுக்கிறது.
இதேபோல் இந்திய ஸ்டாட்ர்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யப் பல சீன நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் இந்தியா சீனா இடையே தற்போது மோசமான சூழ்நிலை நிலவும் காரணத்தால் இந்த முதலீட்டுத் திட்டங்கள் தற்போது தடைபெற்று நிற்கிறது.


Click it and Unblock the Notifications