உலகெங்கிலும் உள்ள Windows 10 பயனர்கள் புதிய Crowdstrike அப்டேட் காரணமாகப் பலரின் கம்ப்யூட்டர் BSOD என்னும் ப்ளூ ஸ்கரீன் பிரச்சனையால் செயலிழந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை தரகு நிறுவனங்களின் கருவிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது. இதனால் நாட்டின் முன்னணி தரகு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தக சரிவால் முதலீட்டாளர்கள் சோகத்தில் இருக்கும் வேளையில், BSOD பிரச்சனை கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இது கம்ப்யூட்டர் அப்டேட் செய்யப்படும் போது, முழுமையாக அப்டேட் ஆகாமல் பாதியிலேயே ப்ளூ ஸ்கிரீன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளது. விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் இந்த பிரச்சனையால் விமான நிலையங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் கம்பியூட்டர்கள் செயலிழந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவை பாதிப்பு காரணமாக, இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஏஞ்சல் ஒன் (Angel One), 5பைசா (5paisa), IIFL செக்யூரிட்டீஸ் (IIFL Securities), மற்றும் நுவாமா (Nuvama) போன்ற பல ப்ரோகரேஜ் நிறுவனங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாஃப்ட்-ன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் Crowdstrike அப்டேட் பிரச்சினையின் விளைவாக தங்கள் டெக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 5பைசா மற்றும் IIFL செக்யூரிட்டீஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன.
"சைபர் செக்யூரிட்டி தீர்வுகளை வழங்கும் Crowdstrike/Microsoft சேவையில் ஏற்பட்ட உலகளாவிய சேவை பாதிப்பு காரணமாக, எங்களின் தொழில்நுட்ப அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் குழு இரு நிறுவனங்களுடனும் இணைந்து, விரைவில் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகிறது," என்று 5பைசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஞ்சல் ஒன், நுவாமா, மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) போன்ற ப்ரோகரேஜ் நிறுவனங்களின் வர்த்தகர்களும் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்தனர். இந்த கோளாறு காரணமாகப் பலர் தங்கள் வர்த்தகத்தில் பணத்தை இழந்துள்ளதாகும் டிவிட்டரில் பதிவுகளை செய்து வருகின்றனர்.
இதேபோல் குறைந்த கட்டண ப்ரோகரேஜ் நிறுவனமான Groww, CrowdStrike உடன் எங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு இயங்காததால், தங்கள் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், பங்குச் சந்தை உலகில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. சீரான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்காக, ப்ரோகஜேர் நிறுவனங்கள் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இதோடு பங்குச்சந்தை BSE, NSE சந்தைகள் எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications