உலக டெக் நிறுவனங்களுக்கு இந்தியா தான் இதயம் போன்றது, இந்திய சந்தை இல்லாமல், இந்திய டெக் ஊழியர்கள் இல்லாமல் இயங்க முடியாது. இந்த நிலையில் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் இந்தியாவில் தனது நிறுவனங்களை அடுத்தடுத்து திறந்து வரும் வேளையிலும், இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தாலும் திறன்மிக்க டேட்டா சென்டர்களின் தேவையும் அவசியமும் அதிகரித்துள்ளது.
இதேபோல் இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் கிளவுட் சேவைகள் இல்லாமல் எந்த டிஜிட்டல் சேவையும் இல்லை என்றான பிறகு கிளவுட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அதன் டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், ஹைதராபாத்தில் சுமார் ரூ.267 கோடி மதிப்பிலான 48 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. சத்ய நாடெல்லா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத் என்பதால் மைக்ரோசாப்ட்-ன் பெரும்பாலான செயல்பாடுகள் இந்த நகரத்திலேயே அமைகிறது.
இந்த நிலையில் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான ப்ராப்ஸ்டாக் (Propstack) வெளியிட்டுள்ள தகவல் படி, ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நில மொத்த விற்பனையாளரான சாய் பாலாஜி டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் சுமார் 267 கோடி ரூபாய்க்கு 48 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் தனது டேட்டா சென்டர் வணிகத்தை விரிவுபடுத்தப் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த பகுதியில் மிகப்பெரிய டேட்டா சென்டர்களில் ஒன்றை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலம் ஹைதராபாத் நகர மையத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் நிறுவனம் இந்த நிலத்திற்காக அதிக விலையைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய மூன்று பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் மைக்ரோசாப்ட் டேட்டா சென்டர் நெட்வொர்க் உடன் ஹைதராபாத் டேட்டா சென்டர் இணைக்கப்பட உள்ளது.
இதைவிட முக்கியமாக மைக்ரோசாஃப்ட் ஹைதராபாத்தில் டேட்டா சென்டர் வணிகத்திற்காக மேலும் இரண்டு நிலங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டேட்டா சென்டர் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது கூகுள, ரிலையன்ஸ், அதானி குழுமம் உட்பட பல குழுமங்கள் டேட்டா சென்டர் விரிவாக்கம் செய்து வருகின்றனர்.
பெங்களூரு மற்றும் நொய்டா தவிர, மைக்ரோசாஃப்ட் தற்போது ஹைதராபாத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டரை இயக்கி வருகிறது. இந்த கேம்பஸ்-ல் தான் அசூர், விண்டோஸ், ஆபீஸ் மற்றும் பிங் போன்ற மைக்ரோசாப்ட்டின் சேவைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications