உலகின் இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் சமீபத்தில் பெரு நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகளைப் பகிரங்கமாக உடைத்து வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
கடந்த 2-3 நாட்களாக எலான் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் தளமான ஜெமினி ஏஐ சேவையில் இருக்கும் இமேஜ் ஜெனரேட்டர் சேவையில் இனரீதியான சார்புடைய படங்களை ஜெனரேட் செய்துள்ளது குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இந்தப் பிரச்சனைக்கு அடுத்தச் சில மாதத்தில் தீர்வு காணுவதாகக் கூகுள் அதிகாரிகளே எலான் மஸ்க்-யிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதுவரையில் ஜெமினி ஏஐ சேவையில் இருக்கும் இமேஜ் ஜெனரேட்டர் சேவை முடக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வசூல்ராஜா படத்தில் கமல், பழைய பேஷண்ட் டிஸ்சார்ஜ் செய்துட்டு, புதுப் பேஷண்ட அட்மிட் செய்யக் கூறுவது போல்.. எலான் மஸ்க் பழைய பேஷண்ட் கூகுள் டிஸ்சார்ஜ் செய்துவிட்டு.. புதுப் பேஷண்ட் மைக்ரோசாப்ட்-ஐ அட்மிட் செய்யக் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டரில் இன்று செய்த பதிவில் சமீபத்தில் புதிய லேப்டாப் ஒன்றை வாங்கியதாகவும், ஆனால் அதை மைக்ரோசாப்ட் கணக்கு (MSA) இல்லாமல் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் எலான் மஸ்க், X தளத்தில் சக டெக் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து தாக்கி பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதேபோல் டெக் நிறுவனங்கள் மக்களின் தகவல்கள், உரிமைகளை எந்த ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மைக்ரோசாப்ட் கணக்கு வழியாக மட்டுமே லேப்டாப்பில் உள்நுழைய முடியுமெனில், அது பயனர் தகவல்களை அணுக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (Copilot) க்கு அனுமதி அளிப்பதற்குச் சமம் என்றும் எலான் மஸ்க் பதிவிட்டார்.
எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் "புதிய லேப்டாப் வாங்கினேன். ஆனால் மைக்ரோசாப்ட் கணக்கு ஒன்றை உருவாக்காமல் அதைப் பயன்படுத்த முடியாது எனத் தெரியவந்தது. இதன் அர்த்தம், அவர்களது செயற்கை நுண்ணறிவு என் கணினியை அணுக அனுமதி அளிப்பதுதான்! இது மிகவும் மோசமானது," என்று எலான் மஸ்க் X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
முன்னர் மைக்ரோசாப்ட் கணக்கில் உள்நுழையாமல் அல்லது உருவாக்காமல் இருப்பதற்கான விருப்பம் இருந்தது, ஆனால் இப்போது இல்லை என்றும் தெரிவித்தார்.
சில பைத்தியக்காரத்தனமான விஷயங்களைப் பார்க்க வேண்டுமா? மைக்ரோசாப்ட் நடத்தை விதிகளைப் படிக்கவும். நீங்கள் சொல்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்களின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதை முடக்க முடியும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ்,விண்டோஸ், முதலியன அடங்கும் என்று Ian Miles Cheong வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
இதற்கு எலான் மஸ்க் நீங்கள் காசு கொடுத்து வாங்கும் லேப்டாப்பை பயன்படுத்த அவர்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருவதால், மைக்ரோசாப்ட் உங்கள் கணினியை எளிதாக முடக்க முடியும் எனத் தெரிவித்தார்.
"சிறந்த பயனர் அனுபவம்" மற்றும் "மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு" ஆகியவற்றை வழங்குவதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டுப் பிப்ரவரியில் வெளியிட்ட விண்டோஸ் 11 இன்சைடர் பில்டில் முதன்முதலாக மைக்ரோசாப்ட் கணக்கின் கட்டாயத் தேவையைச் சோதனை செய்தது.


Click it and Unblock the Notifications