உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் நிறுவனர்கள் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்கு பின்பு இந்த ஹாட் சீட்டில் உட்காரும் மனிதர் சத்ய நாடெல்லா.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவு எப்போது எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்று யாரும் சரியாக கணிக்க முடியாவிட்டாலும், சத்ய நாடெல்லா கிளவுட் சேவை தான் எதிர்காலத்தை மாற்றியமைக்க போகிறது என நம்பினார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தற்போது அதிக வருமானம் ஈட்டி தரும் துறையாக கிளவுட் சேவை உள்ளது.

ஒருபக்கம் கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மறுபக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாடெல்லா என டெக் துறையில் முக்கிய நிறுவனங்களின் சிஇஓ ஆக இந்தியர்கள் நியமிக்கப்பட்ட போது அனைத்து தரப்பினர்களின் கவனமும் கூகுள், மைக்ரோசாப்ட் பக்கம் மீது திரும்பியது.
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்புடன் போட்டிப்போட்டு வருகிறது, இதுமட்டும் அல்லாமல் சத்ய நாடெல்லா சிஇஓ- ஆக பதவியேற்றிய போது மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பு என்பது வெறும் 36 டாலர் மட்டுமே, கடந்த 8 வருடத்தில் மைக்ரோசாப்ட் பங்குகள் 10 மடங்கிற்கு மேல் உயர்ந்து 366.78 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா தலைமையில் கிளவுட், லேப்டாப் தயாரிப்பு, கேமிங் துறையில் நுழைந்தது, வேகமாக வளர்ந்து வரும் ஏஐ துறையில் முதலீடு, ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு என பல துறையில் இறங்கியுள்ளது. பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் நிர்வாகத்தில் வெறும் OS, பிரவுசர் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருந்த மைக்ரோசாப்ட் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த அனைத்து பெருமைக்கும் உரியவர் இன்று 56வது பிறந்த நாள் கொண்டாடும் சத்ய நாடெல்லா தான். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 2.35 டிரில்லியன் டாலர்.


Click it and Unblock the Notifications