சர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை நெருங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வெற்றிகரமான வளர்ச்சி பாதையில் வழிநடத்தி வருகிறார் இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா. கிளவுட், கேமிங், AI முதலீடுகள் சார்ந்த முதலீடுகள் தான் மைக்ரோசாப்ட்-ன் அசுர வளர்ச்சிக்கு காரணம்.
ஹைதராபாத்தில் 1967 இல் பிறந்த சத்ய நாராயண் நாடெல்லா-வின் தந்தை, மாமனார் யார் தெரியுமா..? மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் இவரை அறிவிக்கும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொண்டது.

இது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர்-க்கு பின்பு மூன்றாவது நபராக அதுவும் வெளிநாட்டவரான சத்ய நாடெல்லா-வை சிஇஓ-வாக நியமித்தது கூடுதல் ஸ்பெஷல். இதை இன்போசிஸ் உடன் ஒப்பிட்டுகொள்ள முடியும்.
இன்போசிஸ் நிறுவனர்கள் அனைவரும் சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு வெளியில் இருந்து வந்தவர்கள் தான் விஷால் சிக்கா, சலில் பாரிக். இவர்களின் நியமனத்தின் போது உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்ய நாடெல்லா 2014 ஆம் ஆண்டில் CEO ஆக அறிவிக்கும் முன்பு, அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் பிரிவின் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார். சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் சிறிய நகரத்தில் பிறந்து படித்து, வளர்ந்து மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர சத்ய நாடெல்லா-வின் பின்புலம் எப்படி இருந்தது.
சத்ய நாடெல்லாவின் தாயார் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தார். இவரது தந்தை புக்காபுரம் நாதெள்ளா யுகந்தர் 1962 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சத்ய நாடெல்லா மனைவி அனுபமா, இவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ஆவார். அனுபமா மணிப்பால் கல்லூரியில் சத்யா நாடெல்லாவின் ஜூனியர் ஆவார்.
சத்ய நாடெல்லா-வின் தந்தையும் சரி, மாமனார்-ம் சரி ஐஏஎஸ் அதிகாரி என்பது அவருடைய வளர்ச்சிக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது என்றால் மிகையில்லை. ஐஏஎஸ் மகனான சத்ய நாடெல்லா ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தார்.
இதை தொடர்ந்து பெங்களூரில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில், இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து அமெரிக்காவில் விஸ்கான்சின்-மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
சத்ய நாடெல்லா 1992 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு சன் மைக்ரோசிஸ்டம்ஸில் சில காலம் பணியாற்றினார். சத்ய நாடெல்லாவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது ரூ.6200 கோடி. 2021-2022 நிதியாண்டில், சத்ய நாடெல்லாவின் சம்பளம் 54.9 மில்லியன் டாலர்கள் இது கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications