மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் மனம் உடைந்துவிட்டதாக இன்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நாட்டின் எல்லையை தாண்டி, இஸ்ரேல் நாட்டில் வீடுகளிலும் தெருக்களிலும் இருப்பவர்களை சுட்டுக் கொன்றனர், சனிக்கிழமை காசா பகுதியில் பல முனைகளில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது.

இதன் மூலம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 3000 ஊழியர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 4 நாட்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி தற்போதும் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
மேலும் காசா பகுதியில் இருக்கும் மக்களை இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு தங்க வைத்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் இரு தரப்புக்கு மத்தியிலும் அதிகப்படியான உயிர் சேதம், பொருட் சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்டின் நிர்வாக துணைத் தலைவரும் தலைமை மனித வள அதிகாரியுமான கேத்லீன் ஹோகன் மைக்ரோசாப்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், இஸ்ரேல் நாட்டில் இருக்கும் எங்களுடைய கிட்டத்தட்ட 3,000 ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் உலகெங்கிலும் உள்ள எங்களது வர்த்தக கட்டமைப்புகளில் பணியாற்றும் யூத பணியாளர்கள் வெறுப்பு மற்றும் வன்மம் அதிகரிப்பதால் துக்கம், பயம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் எங்களுடைய உலகளவிய வர்த்தகத்தில் பாலஸ்தீனிய ஊழியர்களும் உள்ளனர், இஸ்ரேல் தாக்குதல் மூலம் தங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்துடன் இருக்கிறார்கள். மேலும் இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லா இந்த மின்னஞ்சலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நிறுவனங்களில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications