Satya Nadella மோடி உடன் கல கல சந்திப்பு.. கூகுள் சிஇஓ தொடர்ந்து மைக்ரோசாப்ட் சிஇஓ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் இந்தியா முக்கிய வர்த்தக டார்கெட் ஆக மாறியுள்ளது. சீனா போன்ற பெரிய வர்த்தகச் சந்தை கொண்ட நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அந்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இந்தியா அனைவருக்கும் முக்கிய டார்கெட் ஆக உள்ளது.

இதனால் இந்தியாவில் புதிய வர்த்தகத்தைத் துவங்கவும், ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் தான் டெக் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் முன்னோடியாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.

திவாலாகும் பாகிஸ்தான்..? சீனா-வின் 'அந்த' பார்மூலா, இங்கேயும் வொர்க் ஆகிறதா..?திவாலாகும் பாகிஸ்தான்..? சீனா-வின் 'அந்த' பார்மூலா, இங்கேயும் வொர்க் ஆகிறதா..?

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா தனது லின்கிடுஇன் தளத்தில் செய்த பதிவில் பல முக்கியமான விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாக இருந்த சந்திப்பிற்குப் பிரதமர் நரேந்திர மோடி-க்கு நன்றி. டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் அடிப்படையிலான நிலையான மற்றும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும் போது வியக்க வைக்கிறது. டிஜிட்டல் இந்தியா விஷன் திட்டத்திற்கு உதவுவதில் மைக்ரோசாப்ட் மிகவும் ஆர்வமாக உள்ளது எனப் பதிவிட்டார்.

 லின்கிடுஇன் பதிவு

லின்கிடுஇன் பதிவு

இதற்கு முந்தைய பதிவில் இந்த வாரம் இந்தியாவுக்கு வருவதில் புத்துணர்ச்சியை அளிக்கிறது, பல கண்டுபிடிப்பாளர்கள், மாற்றங்களைக் கொண்டு வரும் தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா மற்றும் மோடி உடனான சந்திப்பில் மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அனந்த் மகேஷ்வரி-யும் உடன் இருந்தார்.

நாஸ்காம் கூட்டம்

நாஸ்காம் கூட்டம்

இதைத் தொடர்ந்து நாஸ்காம் நடத்தும் India's Skill Imperative கூட்டத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்கில்ஸ், MEITY கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர்கள்.

பெங்களூர்

பெங்களூர்

சமீபத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா பெங்களூரில் நடந்த Microsoft's Future Ready Leadership கூட்டத்தில் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியமானது எனப் பேசிய போது, அனைவரின் முன்னிலையிலும் உலகம் முழுவதும் டிராண்டான Chatgpt தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்தார்.

Chatgpt சொதப்பல்

Chatgpt சொதப்பல்

அப்போது சத்ய நாடெல்லா What about South Indian tiffin? How would you rank all of them? எனக் கேள்வி கேட்டார் அதற்கு Chatgpt தவறான பதில்களை அளித்தது. இதற்கு Chatgpt டெவலப்பர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியா வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து மோடி தலைமையின் கீழ் தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக உள்ளது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என டிவிட்டரில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து தற்போது சத்ய நாடெல்லா மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft CEO satya nadella met PM Narendra modi After Google CEO sundar pichai recently

Microsoft CEO satya nadella met PM Narendra modi After Google CEO sundar pichai recently
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X