பொதுவாக பெரும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்களுக்கென தனி டாக்டர், பிள்ளைகளுக்கு வீட்டிலேயே கற்பிக்க ஆசிரியர், தங்களுக்காக பணியாற்ற ஊழியர் என பல விஷயங்களை தனிப்பட்ட முறையில் செய்துக்கொள்வார்கள்.
இதேபோன்ற சேவையும் வசதியும் அனைத்து தரப்புகளுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்..? உண்மையில் இது சாத்தியம் என்பதை தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பூமியில் இருக்கும் 800 கோடி மக்களுக்கும் AI மூலம் இயங்கும் ஆசிரியர், டாக்டர், ப்ரோகிராமர் கிடைப்பாார்கள் என தான் கனவு காணுவதாக தெரிவித்தார். இது மக்களின் வாழ்க்கையை எளிதாகக்குவது மட்டும் அல்லாமல் மேம்படுத்தும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாடெல்லா Wired நிறுவனத்துடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்திய தனது இந்திய பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்தார், இந்திய அரசின் Digital Public Goods சேவையின் டெமோ பார்தேன், இதில் text-to-speech சிஸ்டம் மூலம் இயங்குகிறது. அடிப்படையில் ஒரு விவசாயி மானிய திட்டம் குறித்து கேள்வி கேட்கிறார், மானிய குறித்த செய்திகளை காட்டுகிறது.
இதை ஒரு டெக் டெவலப்பர் GPT உடன் இணைந்து மானிய விண்ணப்பத்தை பல மொழிகளில் நரப்புவதை பாத்தேன். இது பெரிய அளவிலான மாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டு வரும் என தெரிவித்தார். குறிப்பாக ஜிபிடி மூலம் சிறிய கிராமம், டவுன் பகுதிகளில் இருப்பவர்கள் கூட பெற முடியும்.
இன்று உலகையே கலக்கி வரும் ChatGPT உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிர்வாகம் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீட்டை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications