மறைந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த கலைப்பொருட்களை ஏலம் எடுக்க உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருப்பதால் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பால் ஆலன்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்களின் தொகுப்பை ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. அதன் மதிப்பு $1 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்.
ஏல நிறுவனம் கிறிஸ்டி
500 ஆண்டுகால கலை பொருட்கள் ஏலம் விடும் வரலாற்றில் 150 க்கும் மேற்பட்ட ஏல விற்பனை தஙகள் நிறுவனத்தால் நடந்துள்ளது என்றும், தங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கலைப்பொருட்களின் ஏலமாக இந்த ஏலம் இருக்கும்" என்று ஏல நிறுவனமான கிறிஸ்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓவியம்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்கள் சேகரித்த கலைப்பொருட்களில் பிரெஞ்சு ஓவியர் பால் செசானின் "La montagne Sainte-Victoire" என்ற ஓவியமும் அடங்கும். இதன் மதிப்பு மட்டுமே $100 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலைப்பொருட்கள்
இது மறைந்த கோடீஸ்வரர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்களை ஏலம் எடுக்க ஆர்வமுள்ள கலை சேகரிப்பாளர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என ஏல நிறுவனம் கிறிஸ்டி தெரிவித்துள்ளது.
கலை பகுப்பாய்வு
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களை பொருத்தவரை கலைப்பொருட்கள், கலை பகுப்பாய்வு மிகவும் உணர்வு மிகுந்தவை. அவர் சேகரித்த ஒவ்வொரு பொருளும் கலை யதார்த்தத்தின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒரு கலைஞனின் உள் மனநிலை மற்றும் கலைஞனின் முழுமையான எண்ணங்களை வெளிப்படுத்தும் அளவில் கலைப்பொருட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலம்
இந்த ஏலம் குறித்து கிறிஸ்டியின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் செருட்டி கூறுகையில், இந்த ஏலம் பால் ஆலனின் உத்வேகமான உருவம், படைப்புகளின் அசாதாரண தரம், பன்முகத்தன்மை, மற்றும் அனைத்து வருவாயின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலவையை கொண்டது' என்று கூறினார்.
பில்கேட்ஸ்- பால் ஆலம்
கடந்த 1975ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் அவர்களுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவிய பால் ஆலன் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications