உலக நாடுகள் தனிநபர் தரவுகள் பாதுகாப்பில் மிகப்பெரிய அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, இதற்கு முக்கியம் காரணம் இன்றைய இணைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் சேவையில் செயல்படுகிறது, இதனால் இணையத்தில் மக்களின் முக்கியமான தரவுகள் பரவிக்கிடக்கிறது. இந்த நிலையில் இதை சரியாக பாதுகாக்கப்படாமல் ஹேக்கர்கள் திருடினால் பெரும் ஆபத்தை உருவாக்கும்.
இது ஒருபுறம் இருக்க எந்தொரு நிறுவனமும், தனது வாடிக்கையாளரிடம் (மக்கள்) எந்த தரவுகளை பெற வேண்டும், எதை பெற கூடாது, சேகரிக்கப்பட்ட தரவுகளை எப்படி கையாள வேண்டும் என்ற பலதரப்பட்ட விஷயங்களுக்கு கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

இதிலும் குறிப்பாக தற்போது இளம் தலைமுறையினர் எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் வருவதால் உலக நாடுகள் குழுந்தைகளின் தரவுகளின் நிர்வாகத்திற்கென தனி கொள்கையை உருவாக்கியுள்ளது.
உதாரணமாக அமெரிக்க அரசு குழந்தைகளின் தரவுகள் நிர்வாகத்திற்காக Children's Online Privacy Protection Act (COPPA) என்ற விதியை உருவாக்கியுள்ளது. COPPA விதியை மீறியற்காக தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது வழக்கு கொடுக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் டாலர் அளவிலான தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமை விகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், பெற்றோர் அனுமதி பெறாமல் அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் Xbox gaming system-ல் கணக்கை துவங்கிய குழந்தைகளில் தரவுகளை மைக்ரோசாப்ட் சட்டத்திற்கு புறம்பாக கலெக்ட் (திருடி) செய்துள்ளது மட்டும் அல்லாமல் அதை பாதுகாப்பாக சேமித்தும் வைத்துள்ளது என அமெரிக்க Federal Trade Commission (FTC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விதிமீறல் பிரச்சனையை சரி செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 20 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அபராதமாக செலுத்த Federal Trade Commission உத்தரிவிட்டு உள்ளது. இதுப்போன்ற பிரச்சனை எதிர்காலத்தில் வர கூடாது என்பதற்காக Xbox-ல் குழந்தைகளுக்கான privacy கொள்கையை மாற்ற உள்ளது.
COPPA விதிமுறைகளின் படி ஆன்லைன் சேவை தளம் முதல் சாதாரண இணைய தளம் வரையில் 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தரவுகளை சேகரிக்க வேண்டுமாயின் அவர்களின் பெற்றோர்-யிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதையும் மைக்ரோசாப்ட் மீறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications