மைக்ரோசாப்ட் நிறுவனம் மிக தீவிரமாக ஏஐ பயன்பாட்டை கொண்டு வரும் நிலையில், ஊழியர்கள், நிறுவன தலைமைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். இது தொழில்நுட்ப உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தாறுமாறாக ஏஐ முதலீடுகளை செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறது.
அண்மையில் கூட 60,000 ஊழியர்கள் தாமாக முன் வந்து வேலையை விட்டு செல்வதற்கான திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அதீத ஏஐ பயன்பாட்டால் தங்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி நிறுவன தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றுவது தற்போது மனச்சோர்வை தருவதாக மாறியுள்ளது என ஊழியர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

ஊழியர்களின் சம்மதமோ அல்லது முறையான பயிற்சியோ இல்லாமல், அவர்களின் அன்றாட பணிகளின் ஒவ்வொரு பகுதியிலும் ஏஐ கருவிகளை பயன்படுத்த நிறுவனம் கடுமையான அழுத்தத்தை கொடுப்பதாக சாடியுள்ளனர்.
ஏஐ கருவிகள் வேலைகளை எளிதாக்கும் என நிறுவனம் கூறினாலும், நடைமுறையில் புதிய ஏஐ கருவிகளை கற்று கொள்வதற்கும் மட்டுமே தங்களின் பெரும்பகுதி நேரம் வீணடிக்கப்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வேலைச்சுமை மேலும் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 60,000 இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏஐ ஆதிக்கம் காரணமாகவே இந்த வேலைவாய்ப்பு குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் மற்றும் லாபம் அதிகரித்துள்ள போதிலும் தங்களுக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு 1% அல்லது அதற்கும் கீழே தான் உள்ளதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறம், டேட்டா சென்டர்கள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்காக நிறுவனம் பல நூறு பில்லியன் டாலர்களை செலவழிப்பதாக கூறுகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பத்தை ஊழியர்கள் மீது கட்டாயபப்டுத்தி திணிக்க கூடாது என கூறும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தங்களின் பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும் என கூறுகின்றனர். மேலும் ஏஐ கருவிகளின் பாதுகாப்பு தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமல் ஏஐ தொழில்நுட்பங்களை அவசரமாக திணிக்க கூடாது, நிறுவனத்தின் லாபத்தை மட்டும் பார்க்காமல் ஊழியர்களின் நிலைமையையும் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியில் ஏஐ போட்டி தீவிரமாக உள்ளது. ஏஐ ஏஜெண்டுகள் கட்டளைகளை மீறி செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் நிறுவனங்கள் தங்களின் ஏஐ ஆய்வுகளை நடத்தாமல் இல்லை. இந்நிலையில் தான் ஊழியர்களே பணி பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

