திறன் குறைவாக இருக்கும் காரணத்தினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இதுபோன்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கு அந்நிறுவனம் 2 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இதை வைத்தே நிறுவனம் தனது நிர்வாக அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்து வருவதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பிசினஸ் இன்சைடர் சில உள் ஆவணங்களை பெற்றுள்ளது. அதில் "குட் அட்ரீசன் ரேட்" என்ற ஒரு அளவீட்டை மைக்ரோசாஃப்ட் கண்காணித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது சில ஊழியர்கள் தாமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறுவது நிறுவனத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமாம்.

சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைவான செயல்திறன் கொண்ட சுமார் 2,000 ஊழியர்களை எந்தவித இழப்பீடும் வழங்காமல் பணிநீக்கம் செய்தது. தற்போது இன்னும் 2 ஆண்டுகளுக்கு இது போன்ற ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. குறைவாக செயல்திறன் கொண்ட ஊழியர்களை வெளியேற்றி அவர்கள் மீண்டும் நிறுவனத்திற்கு வராமல் தடுப்பதுதான் இந்த பாலிசியின் முக்கிய நோக்கம்.
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல் திறன் குறைவாக பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒன்று பெர்ஃபார்மன்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் பிளானை ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களுடைய செயல் திறனை வெளிப்படுத்துதல்.
இந்த திட்டத்தில் ஊழியர்கள் எந்தெந்த விஷயங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய குறைபாடுகளை கண்டறிந்து இலக்குகளை அடைய வேண்டும். அதற்குள் தங்கள் செயல் திறனை சிறப்பாக காண்பித்து விட்டால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லை என்றால் தாங்களாக நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். பெர்ஃபார்மன்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் பிளானை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஊழியர்கள் தாங்களாகவே நிறுவனத்தில் இருந்து வெளியேறலாம். அப்படி வெளியேறும் போது ஊழியர்களுக்கு 16 வார ஊதியத்திற்கு சமமான தொகை கொடுக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய அணுகுமுறை ஏற்கனவே இதே போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அணுகுமுறையை அப்படியே பிரதிபலிக்கின்றன. மெட்டா நிறுவனமும் இதே போன்ற செயல்முறையை செய்து வருகிறது.
இதுபோன்ற செயல்முறையை நிறுவனங்கள் கடைபிடிப்பதற்கு ஒரு காரணம் நிர்வாகச் செலவுகளை குறைப்பதாகும். அதோடு மைக்ரோசாப்ட் நிறுவனம் எதிர்காலத்தில் அதிக செயல் திறன் கொண்ட பணியாளர்களைக் கொண்டிருக்கவும் இந்த பாலிசிகள் உதவும். மறுபுறம் வேறு சில காரணங்களால் தங்கள் செயல் திறனில் கவனம் செலுத்தாமல் இருக்கும் ஊழியர்களுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஒரு வேலை அதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றால் வேலைவாய்ப்பின்மை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
More From GoodReturns

மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications