பெங்களூரு: பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்பவர்கள் வார இறுதி நாட்களில் என்ன செய்வார்கள் ? நண்பர்களோடு ஊர் சுற்றுவார்கள், பார்ட்டிக்கு செல்வார்கள் இப்படி தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும் ஒரு நபர் வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது.
பெங்களூரில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. வெங்கடேஷ் குப்தா என்பவர் அண்மையில் தான் பயணம் செய்த ஆட்டோவின் ஓட்டுநர் மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு இருக்கிறார். அவர் ஆட்டோ ஓட்டும் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொதுவாகவே கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் ஊதியம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு மன அழுத்தம் அதனால் ஏற்படும் தனிமை என பல பிரச்னைகள் வருகின்றன. இந்த தனிமையை போக்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் பலரும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்கிறார்கள்.
அப்படி தான் இந்த 35 வயது இளைஞர், வார இறுதி நாட்களில் தனிமையை போக்க ஆட்டோ ஓட்டுகிறாராம். இவர் ஆட்டோ ஓட்டும் புகைப்படத்தை வெங்கடேஷ் குப்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்., அதில் அவரது முகம் தெரியவில்லை. ஆனால் அவர் அணிந்திருக்கும் சட்டையில் மைக்ரோசாப்ட் என அச்சிடப்பட்டுள்ளது. 35 வயதாகும் இவர் நம்ம யாத்ரியில் பதிவு செய்து கோரமங்கலா பகுதியில் வார இறுதி நாட்களில் மட்டும் ஆட்டோ ஓட்டுகிறாராம்.
இந்த பதிவின் கீழ் சமூக வலைத்தளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மனிதர்கள் உடனான கலந்துரையாடலே இல்லாமல் போய்விடுகிறது. எனவே இவரது முடிவு சரி தான் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
புதிய மனிதர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பாக இது இருக்கும் என ஒருவர் கூறியுள்ளார். ஆனால் பெங்களூரு டிராஃபிக்கில் ஆட்டோ ஓட்டுவதற்கு தனியாகவே இருந்துவிடலாம் என தோன்றிவிடும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதேபோல ஒரு பெரு நிறுவன ஊழியர் ரேபிடோ பைக் ஓட்டுவதாக செய்தி வெளியானது. சிலர் இது போன்ற வேலைகள் மூலம் இத்துறை சார்ந்தவர்களுடன் நெட்வொர்கிங் செய்து கொள்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications