உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது மெட்டாவெர்ஸ் துறைக்குள் நுழைந்துள்ள நிலையில், யார் முதலில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பது தான் தற்போது முக்கியப் போட்டியாக உள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் மெட்டாவெர்ஸ் துறைக்குள் நுழைய வேண்டும் என்பதற்காகவே தனது தாய் நிறுவனத்தை மெட்டா என வைத்தது.
சீனா நிறுவனங்கள் ஏற்கனவே மெட்டாவெர்ஸ் பிரிவில் பல சேவைகளை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய கூட்டணி உடன் களத்தில் இறங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நீண்ட காலமாக ஆகுமென்டெட் ரியாலிட்டி பிரிவில் இயங்கி வரும் நிலையில் தற்போது மெட்டாவெர்ஸ் பிரிவில் இறங்கியுள்ளது. மெட்டாவெர்ஸ் என்பது மாய உலகம் அதாவது விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம், இதைப் பயன்படுத்தத் தனிப்பட்ட சில கருவிகள் தேவை. இதைத் தயாரிப்பதற்கான பணிகளில் மைக்சோசாப்ட் தற்போது குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
மெட்டாவெர்ஸ் செயலி
மெட்டாவெர்ஸ் செயலிகளை நுகர்வோரும், வர்த்தகங்களும் பயன்படுத்துவதற்கான ஆகுமென்டெட் ரியாலிட்டி கிளாஸ் உருவாக்குவதற்கான சிப்-களை மைக்ரோதாப்ட் இத்துறையில் முன்னோடியான குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
குவால்காம் நிறுவனம்
ஸ்மார்ட்போன் சிப் தயாரிப்பிலும், தரத்திலும் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்த குவால்காம் தற்போது மெட்டாவெர்ஸ் அதுவும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை உலகம் முழுவதும் வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் இத்துறையிலும் தனக்கான இடத்தைப் பிடிக்கும்.
குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் கூட்டணி
தற்போது குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து உருவாக்கும் சிப், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கானது மட்டும் அல்லாமல் மெட்டாவெர்ஸ் துறையில் இயங்கும் அனைத்தும் மென்பொருள் வல்லுனர்களும் ப்ரோகிராம் செய்யக் கூடிய வகையிலான சிப் என லாஸ்வேகாஸ்-ல் நடந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் விழாவில் குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி Cristiano Amon தெரிவித்துள்ளார்.
Mesh மென்பொருள்
மேலும் குவால்காம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Mesh என்னும் புதிய மென்பொருள் திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், இது ஆன்லைன் கேம்மிங் மற்றும் மெட்டாவெர்ஸ் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications