உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியா சத்ய நாதெல்லா, மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
இந்த செய்தி மைக்ரோசாப்ட் ஊழியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் ஒவ்வொருவராக தங்களுடைய மனக்குமுறல்-களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் Isabela Moreira டிவிட்டரில் இந்த ஆண்டு சம்பள உயர்வை வழங்கப்படாதது கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது என தெரிவித்தார்.
பொருளாதாரம் எப்படி இருந்தாலும், சம்பள உயர்வு வழங்காமல் இருந்தால் எந்தொரு ஊழியருக்கும் வேதனை அளிக்கும். மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்காது என முடிவு செய்த நிலையில், சம்பளத்திற்கு ஏற்றார் போல் பணியாற்றுவது, கூடுதலான வேலைக்கு நோ தேங்கஸ் சொல்ல வேண்டிய நேரம் இது என டிவிட்டரில் Isabela Moreira தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் கடந்த ஒரு வருடத்தில் 10000த்திற்கும் அதிகமாக டெக் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் சம்பள உயர்வு ரத்து குறித்த செய்தி, சம்பள உயர்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பல மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக மார்ச் காலாண்டில் சிறப்பான லாபம் வருவாய் அளவீட்டை பதிவு செய்துள்ள நிலையில் சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. மார்ச் காலாண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லாபம் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 3 மாதத்திலஸ் 18.3 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் மார்ச் காலாண்டில் 52.9 பில்லியன் டாலர் தொகையை வருமானமாக பெற்றுள்ளது.
சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு உயர் அதிகாரிகள், மூத்த தலைவர் உட்பட அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற காலங்களில் நிறுவனத்தின் வணிகம் மற்றும் அதன் ஊழியர்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய விரும்புவதாக கூறப்பட்டு உள்ளது. இந்தி செய்தி மைக்ரோசாப்ட் ஊழியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதால் சமுக வலைத்தளத்தில் தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications