அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft) 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 தேதி தொடங்கப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் தொடக்கம்!
பில் கேட்ஸ் 1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சி அடைந்தது.
முதல் சர்வதேச அலுவலகம்
மைக்ரோசாப்ட்டின் முதல் சர்வதேச அலுவலகம் ஜப்பான் நாட்டில் 'ஆஸ்கி மைக்ரோசாப்ட்' என்ற பெயருடன் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி உருவானது. அதன்பின் இந்நிறுவனம் 1979 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக SQL, Oracle பதிப்பு 2 இல் அதன் மென்பொருளை வெளியிட்டது.
மைக்ரோசாப்ட்
நவம்பர் மாதம் 29ஆம் தேதி 1979ஆம் ஆண்டு பில் கேட்ஸ் 'மைக்ரோசாப்ட்' என்ற பெயரை தேர்வு செய்து அதன்பின் இப்பெயரிலேயே நிறுவனம் செயல்ப்ட ஆரம்பித்தது.
அதனையடுத்து 1984 இல் மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு வர்த்தக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும் கொடுக்கப்பட்டது.
விண்டோஸ் 1.0.
அதன்பின் 1985 ஆண்டு விண்டோஸ் 1.0. வெளியானது. 1990 களில் NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.
அதனையடுத்து 1992 இல் நிறுவனம் விண்டோஸ் 3.1 வெளிட்டது. இது வெளியான சமயத்தில் விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர்.
விண்டோஸ் வளர்ச்சி
அதனிபின் Windows XP, Microsoft share point, Dot net 1.0, Windows Server, windows Exchange Server தொடங்கி இன்று OpenAI நிறுவனத்துடன் இணைந்து ChatGPT என்ற AI சாஃப்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சத்யா நாடெல்லா!
அதனிபின் Windows XP, Microsoft share point, Dot net 1.0, Windows Server, windows Exchange Server தொடங்கி இன்று OpenAI நிறுவனத்துடன் இணைந்து ChatGPT என்ற AI சாஃப்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சத்யா நாடெல்லா!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாடெல்லா பதவி வகித்து வருகிறார். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர்.
சத்ய நாடெல்லா 1992ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலேயே பணிபுரிந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உச்ச பதவிக்கு முன்னேறியவர் என்பதுதான் சிறப்பு.
ChatGPT AI!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் OpenAI நிறுவனம் 2022 நவம்பர் மாதம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. இந்த சாட்போட் உலகளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
ஏஐ துறையில் சாட் ஜிபிடி ஒரு புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கட்டுரை எழுதுவது, coding செய்வது என எல்லா வேலைகளையும் சொன்னபடி செய்து முடிக்கிறது சாட் ஜிபிடி. இது ஒரு சவுகரியமாக இருந்தாலும் கூட, சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்களால் பல வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் எனவும் அச்சம் எழுந்தது.
கூகுள் உடன் போட்டி
சாட் ஜிபிடிக்கு போட்டியாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சொந்தமாக ஏஐ சாட்போட் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கூகுள் நிறுவனம் ஏற்கெனவே Bard என்ற ஏஐ சாட்போட்டை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மற்ற சில நிறுவனங்களும் சாட்போட் உருவாக்க முயற்சித்து வருகின்றன. சீன நிறுவனங்களும் கூட ஏஐ சாட்போட் போட்டியில் குதித்துள்ளன.
மைக்ரோசாஃப்ட் பணிநீக்கம்!
கடந்த ஆண்டு மைரோசாஃப்ட் நிறுவனம் அதன் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனையடுத்து ஜனவரி மாதம் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்திருந்தது.
மைக்ரோசாப்ட் ஊழியர்கள்
இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பொறியியல் பிரிவுகள், மனிதவளம் உள்ளிட்ட துறைகளில் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2,21,000 முழு நேர ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 122,000 பேர் அமெரிக்காவிலும், 99,000 பேர் மற்ற நாடுகளிலும் வேலை செய்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications