உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 20,000க்கும் அதிகமான டெக் ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம், ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் 20000 ஊழியர்களில் 10000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் ஹைதராபாத்தில் பணியாற்றி வரும் வேளையில், தற்போது புதிய அலுவலகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் கூடுதலாக 2500 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளது.

மைக்ரோசாப்ட் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அதிநவீன புதிய கேம்பஸ்-ஐ இன்று திறந்துள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தின் பரபரப்பான ஐடி ஹப் ஆக விளங்கும் கச்சிபோவ்லியில் அமைந்துள்ள 11 லட்ச சதுரடியில், LEED-சான்றிதழ் பெற்ற அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த புதிய அலுவலகத்தில் 2,500 ஊழியர்களும், ஹைதராபாத் நகரில் புதிதாக 4,800 ஊழியர்களையும் பணியமர்த்தப்பட மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டு உள்ளது.
மேலும், தெலுங்கானா அரசாங்கத்துடன் ஒரு குறிப்பிடத்தக்கக் கூட்டாணியை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்துள்ளது. இந்த மாநிலத்தில் 1.2 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தெலுங்கானா அரசு உருவாக்கியுள்ள "அட்வான்டா(I)ஜ் தெலுங்கானா" திட்டத்தின் கீழ், AI பவுண்டேஷன்ஸ் அகாடமியைத் தொடங்கி, 500 அரசுப் பள்ளிகளுக்கு AI கல்வியைக் கொண்டு சென்று, சுமார் 50,000 மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இரண்டாவது திட்டமான AI-Industry Pro திட்டம், தெலுங்கானா முழுவதும் 20,000 தொழில் வல்லுநர்களுக்கு திறன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது திட்டமாக AI-Govern முயற்சி, டிஜிட்டல் உற்பத்தித்திறன், ஜெனரேட்டிவ் AI மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற முக்கிய பகுதிகளில் 50,000 அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கும்.
மேலும், மைக்ரோசாஃப்ட் தெலுங்கானா அரசாங்கம் மற்றும் பிற அமைப்பினர் இணைந்து ஒரு AI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (AICoE) ஐ நிறுவி இயக்கும். இந்த CoE, சென்டரலைய்ஸ்டு AI Knowledge Hub, AI டெவலப்மென்ட்-க்கான கிளவுட் அடிப்படையிலான உள்கட்டமைப்பை வழங்கும்.
இவை அனைத்தையும் தாண்டி மைக்ரோசாப்ட் இந்தியாவில் ஏஐ சேவை பயன்பாட்டை அதிகரிக்கவும், ஏஐ சேவைகளை உருவாக்கும் நிறுவனங்களும் சேவை அளிக்க ஹைதராபாத் நகரில் hyperscale AI data centers-களை அமைக்க 15000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வரும் ஆண்டுகளில் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications