உலகின் அதிக மதிப்புமிக்க டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) நிறுவனம், ஹைதராபாத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய அலுவலக குத்தகை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்நகரின் மையப் பகுதியில் சுமார் 2,64,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், பணியிடச் சேவை வழங்கும் டேபிள் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் உடன் புதிய ஐந்தாண்டு குத்தகை ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்தப் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், ப்ராப்ஸ்டாக் நிறுவனம் மூலம் தற்போது ஒப்பந்தம் குறித்த விபரங்கள் வெளியே வந்துள்ளது, இந்த ஒப்பந்தம் ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு நகரின் ரியல் எஸ்டேட் துறைக்கு 2 வகையில் வளர்ச்சி அடையும், 1. அதிகப்படியான மக்கள் வீடு, அலுவலக, வர்த்தக இடங்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவது அல்லது வாடகை ஒப்பந்தம் செய்யப்படும் போது வளர்ச்சி ஏற்படும். 2. இதேபோல் வர்த்தகம் குறைவாக இருந்தாலும் அதிக விலையில் வீடு, அலுவலக, வர்த்தக இடங்களை வாங்கும் போது ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையும்.
அந்த வகையில் ஹைதராபாத்தில் தற்போது 2வது வகையிலான வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஹைதராபாத் நகரில் ஆடம்பர வீடுகளின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இதேபோல் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் வீடு மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
தற்போது மைக்ரோசாப்ட் செய்துள்ள ஒப்பந்தம் கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கானது. சுமார் 2,64,000 சதுர அடி அலுவலக இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சதுர அடிக்கு ரூ.67 வீதம், மாத வாடகையாக ரூ.1.77 கோடி செலுத்துவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
இதை தொடர்ந்து பொது பராமரிப்பு, இயக்கச் செலவுகள், மூலதனச் செலவுகள் மற்றும் மேலாண்மைக் கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து, மைக்ரோசாப்டின் மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.5.4 கோடி அதாவது ஒரு சதுர அடிக்கு ரூ.204 அளிக்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் படி ஆண்டுக்கு 4.8% வாடகை உயர்வு மற்றும் 60 மாத குத்தகைக்கு ரூ.42.15 கோடி டெப்பாசிட் தொகை ஆகியவை மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்க உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய குத்தகை ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் மற்ற நகரங்களை காட்டிலும் ஹைதராபாத்தில் அதன் செயல்பாடுகளை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவதை குறிக்கிறது. இந்நிறுவனம் 1998 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இதேவேளையில் தான் மைக்ரோசாப்ட் பெரும் முதலீடு செய்த ஓபன்ஏஐ இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications