உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் கடந்த சில வருடங்களாகப் பல டெக் நிறுவனத்தின் முதலீடு செய்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதல் முறையாக மைக்ரோசாப்ட் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையைச் சேர்ந்த, அதுவும் இந்தியாவைச் சேர்ந்த OYO நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து தவிக்கும் OYO நிறுவனத்திற்கு இந்த முதலீடு பெரும் உற்சாகத்தையும், வாய்ப்பையும் கொடுத்துள்ளது.
சத்ய நாடெல்லா
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்வேறு காரணத்திற்காகப் பில் கேட்ஸ் மொத்தமாக நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறிய நிலையில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். மைக்ரோசாப்ட் சமீப காலமாக டெக் துறையைத் தாண்டி பிற துறைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
இதன் ஒரு பகுதியாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் தனக்கு சற்றும் தொடர்பில்லா துறையில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
OYO நிறுவனத்தில் முதலீடு
மைக்ரோசாப்ட் ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் முதல் முறையாக ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையைச் சேர்ந்த OYO நிறுவனத்தில் சுமார் 5 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் போது OYO நிறுவனம் 9.6 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு முதல் முறையாக 10 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.
2 மாத பேச்சுவார்த்தை
OYO நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்துள்ளது மிகவும் குறைந்த அளவிலான முதலீடாகவே இருந்தாலும், இனி வரும் காலத்தில் பெரும் தொகையை மைக்ரோசாப்ட் முதலீடு செய்யத் தயாராக உள்ளது. ஜூலை மாதமே மைக்ரோசாப்ட் OYO நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானதைத் தமிழ் குட்ரிட்டனஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
ஐபிஓ கனவு
இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராகி வரும் நிலையில், OYO நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஆர்வமாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது OYO நிறுவனம்.
பங்கு பகிர்வு
OYO நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ள 5 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு 5 ஈக்விட்டி பங்குகளும், 80 preference shares-ஐ தலா 58,490 டாலர் மதிப்பீட்டில் சீரியல் F2 சுற்றில் கொடுத்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக OYO 5 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது.
8 நாடுகளில் பிஸ்னஸ்
2013ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் துவங்கினார், இந்த நிறுவனத்தின் மூலம் உலகிலேயே இளம் வயதில் பில்லியனர் ஆனவர்கள் பட்டியலில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். OYO நெட்வொர்கில் தற்போது 1,00,000 சிறிய ஹோட்டல்கள் உள்ளது, இந்நிறுவனத்தின் வர்த்தகம் 800 நகரங்களில் 8 நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications