சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், OpenAI உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், இதன் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும், உலகில் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கியுள்ளது.
இப்படி செயற்கை நுண்ணறிவு துறையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கணக்கில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த G42 என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் 11,250 கோடி ரூபாய் (1.5 பில்லியன் டாலர்) முதலீட்டைச் செய்ய உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, G42 நிறுவனம் தனது அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகளை மைக்ரோசாஃப்ட்டின் Azure கிளவுட் சேவை தளத்தில் இயக்கவுள்ளது. மைக்ரோசாப்ட் சமீபத்தில் தான் ஜப்பான் நாட்டின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் 2.9 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் UAE நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் முதலிடம்:
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம், மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக உள்ளது. இந்த கூட்டணியின் காரணமாக, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக ஆப்பிளை முந்தி முதலிடம் பிடித்துள்ளது மைக்ரோசாஃப்ட்.
G42 நிறுவனத்தில் மைக்ரோசாப்ட்-ன் முதலீடு, அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய ஏன் இரு அரசுகளும் பேச வேண்டும்..?
இந்த முதலீட்டின் மூலம் G42 நிறுவனத்தில் இருக்கும் சீன நிறுவனங்களுடனான கூட்டணிகள் மொத்தமாகத் துண்டிக்கப்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் UAE நிறுவனங்கள் அமெரிக்க தொழில்நுட்பத்தை நோக்கி மாறுவதற்கு G42 நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும் இந்த 1.5 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித், G42 நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணைய உள்ளார்.
அபுதாபி-ஐ தலைமையிடமாகக் கொண்ட G42 நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான தஹ்னூன் பின் ஜாயேத் (Tahnoon bin Zayed) என்பவரின் சுமார் $1.5 டிரில்லியன் மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகும். இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயேத் (Mohamed bin Zayed) அவர்களின் சகோதரர் ஆவார்.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் G42 நிறுவனம் மைக்ரோசாப்ட் அசூர் சேவையை அரசு நிறுவனங்கள் மற்றும் பெரிய வர்த்தக குழுமத்திற்கு வழங்க உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications