தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இந்த 2 நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டது.
ஆனால் கணிப்புகளை உடைத்து 2வது நாள் முடிவில் தமிழ்நாடு மொத்தம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்கான முதலீட்டு விருப்பங்களைப் பெறப்பட்டு உள்ளது என்று முக ஸ்டாலின் அறிவித்தார்.

மைக்ரோசாப்ட்: இக்கூட்டத்தில் பல முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் 2,740 கோடி முதலீட்டில் புதிய டேட்டா சென்டர் அமைக்க உள்ளதாகச் சைலென்டாக அறிவித்து அதகளப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் மிகப்பெரிய முதலீட்டை அறிவித்து அசத்தியுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து மைக்ரோசாப்ட் முதலீடுகள் அலுவலகங்கள் தமிழ்நாட்டில் வர வாய்ப்பு உள்ளது.
AdaniConneX: இதேவேளையில் அதானி குழுமத்தின் டேட்டா சென்டர் வர்த்தகமான Adani connex இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய டேட்டா சென்டர் அமைக்கவும், ஏற்கனவே சிறுசேரியில் இருக்கும் டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்யவும் 13,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவில் 1 ஜிகாவாடா டேட்டா சென்டரை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அதானி குரூப், EdgeConneX உடன் இணைந்து உருவாக்கியது தான் அதானி AdaniConneX. இந்நிறுவனம் சென்னையில் சிறுசேரி சிப்காட்-ல் ௩௩ மெகாவாட் செயல்திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைந்துளள்ளது.
ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ்: முகேஷ் அம்பானி சென்னையில் நடக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
இத்துடன் ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் கனடா நாட்டின் ப்ரூக்பீல்ட் அசர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி உடன் இணைந்து தமிழ்நாட்டின் உயர் தொழில்நுட்பம், அதிநவீன டேட்டா சென்டரை அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டர் அடுத்த வாரத்தில் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தது மூலம் 14,54,712 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மறைமுகமாக 12,35,945 பேருக்கு வேலைவாய்ப்பு என மொத்தம் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தின் முக்கிய இலக்கே வளர்ச்சி வாய்ப்புகளைச் சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான்.


Click it and Unblock the Notifications