உலகளவில் உருவாகியிருக்கும் பொருளாதார மந்த நிலை சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது.
இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனத்தில் ஏற்கனவே புதிய ஊழியர்களைச் சேர்க்கும் அளவீடுகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது, இதனால் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஆனால் உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகப் பொருளாதார மந்தநிலையை உணர்ந்து ஊழியர்களைப் பணிநீக்கத்தைச் செய்தது.
இதில் மைக்ரோசாப்ட் முன்னோடியாக அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
டெக் நிறுவனங்கள்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலையைச் சீரியஸ் ஆகப் பார்த்தது, இதனால் டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ் என அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களைக் கடந்த 6 மாதங்களாகப் படிப்படியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.
சத்ய நாடெல்லா
இந்நிலையில் இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் XBOX, EDGE குறிப்பிட்ட பல அணிகளில் இருந்து சுமார் 1000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
மைக்ரோசாப்ட்
இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் விண்டோஸ் லைசென்ஸ் கொண்ட கம்ப்யூட்டர் விற்பனையும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
வருவாய்
சில நாட்களுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது SURFACE கணினி பிரிவில் Surface Laptop 5, Surface 9 Pro tablet, Studio 2+ ஆகியவற்றை அறிமுகம் செய்தது. ஜூலை காலாண்டில் கடந்த 5 வருடத்தில் கண்டிராத வகையில் வருவாயில் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி மைரோசாப்ட் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications