மைக்ரோசாப்ட் பங்குகள் எப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2.5 டிரில்லியன் டாலரை தாண்டி 2.59 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த 15 வருடத்தில் முதலீட்டு சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் கொண்ட பிரிவாக டெக் நிறுவனங்கள் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக ஐடி சேவை துறை இருந்தாலும், அதிக முதலீட்டை பெறவில்லை. அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேநேரத்தில் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுனங்கள் அனைத்தும் பணிநீக்கம், வர்த்தக பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், கூகுள் பங்குகள் 2023 ஆம் ஆண்டில் 40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
உலகளவில் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆப்பிள் முதல் முறையாக 2 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை கொண்ட நிறுவனம் என்ற பெயரை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்த சில வாரத்தில் 3 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்ற நிறுவனமாக உருவெடுக்க உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 2.93 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் AI தொழில்நுட்ப பயன்பாட்டிலும், அதை மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதிலும் முதன்மையாக உள்ளது. இதைவிட முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure cloud மிகப்பெரிய வர்த்தக பிரிவாக மாறியதோடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் ChatGPT சேவையை மைக்ரோசாப்ட் தனது அனைத்து சேவைகளிலும் புகுத்தியுள்ளது.
இதில் முக்கியமாக மைக்ரோசாப்ட்-ன் வெப் பிரவுசர் மற்றும் சர்ச் இன்ஜின் ஆன BING உடன் ChatGPT இணைக்கப்பட்டு உள்ளதன் மூலம் கூகுள் விளம்பர வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் - ஒரு பங்கு விலை 348.10 டாலர் - சந்தை மதிப்பு 2.59 டிரில்லியன் டாலர் - 2023 ஆம் ஆண்டில் 45.30 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
ஆப்பிள் - ஒரு பங்கு விலை 186.01 டாலர் - சந்தை மதிப்பு 2.93 டிரில்லியன் டாலர் - 2023 ஆம் ஆண்டில் 48.72 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
கூகுள் - ஒரு பங்கு விலை 125.09 டாலர் - சந்தை மதிப்பு 1.59 டிரில்லியன் டாலர் - 2023 ஆம் ஆண்டில் 40.36 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
அமேசான் - ஒரு பங்கு விலை 127.11 டாலர் - சந்தை மதிப்பு 1.30 டிரில்லியன் டாலர் - 2023 ஆம் ஆண்டில் 48.11 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி, இதேபோல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் எனில் 82 லட்சம் கோடி ரூபாய்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications