மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்.. எலான் மஸ்க் சொன்னது அப்படியே நடக்குதே.. ஓப்பன்ஏஐ மூலம் வில்லங்கம்..?

உலகம் முழுவதும் சைபர் அட்டாக் மற்றும் திடீர் சேவை முடக்கம் என்பது தொடர் கதையாகிவிட்டது. வங்கி மற்றும் நிதி அமைப்புகள் ஒருபக்கம் தனது சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி வரும் வேளையில், டெக் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் இயங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கிடையில் உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட்-ன் முக்கிய சேவைகளான அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் மற்றும் மைக்ரோசாப்ட் 365-ன் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்.. எலான் மஸ்க் சொன்னது அப்படியே நடக்குதே.. ஓப்பன்ஏஐ மூலம் வில்லங்கம்..?

இதற்கிடையில் எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போட்ட ஒரு டிவீட் தற்போது மீண்டும் டிரெண்டாகி டெக் உலகில் பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் தளத்தில் ஏற்பட்ட பெரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கியிருக்கும் காரணத்தால் ஒட்டுமொத்த கார்ப்ரேட் துறையும் முடங்கியுள்ளது. பொதுவாக கார்ப்ரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மத்தியிலான தகவல்களை டீம்ஸ் மற்றும் அவுட்லுக் தளத்தைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இதோடு பல ஐடி சேவை நிறுவனங்கள் கோபைலட் பயன்படுத்தித்தான் கோடிங் எழுதி வருகின்றனர்.

இவை அனைத்தும் முடங்கியிருக்கும் காரணத்தால் கார்ப்ரேட் ஊழியர்கள் கடுமையாகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பல நிறுவனத்தில் பணிகள் முடங்கியுள்ளதாகவும் சமுக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகி வருகிறது. இந்த சேவை முடக்கத்தைச் சரி செய்ய மைக்ரோசாப்ட் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட அப்டேட்டில், இதுவரையில் மேற்கொண்ட சீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை, மாற்று வழிகளை ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தரப்பில் செய்யப்பட்ட எக்ஸ் பதிவில் முடங்கிய சேவைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், திரும்பச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாற்றங்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் நெட்வொர்க் சிக்கல்களுக்கு மத்தியில், சேவைகள் முழுமையாக இயங்குவதற்கான உள்கட்டமைப்புத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது. இதற்காக சர்வர்களின் திறனை அதிகரிப்பது, நெட்வொர்க்-ஐ சீரமைக்கும் பணிகளையும் மைக்ரோசாப்ட் செய்து வருகிறது.

எலான் மஸ்க் போஸ்ட்..

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் GPT-5ஐ Microsoft 365 Copilot, Copilot, GitHub Copilot மற்றும் Azure AI Foundry ஆகியவற்றில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கு எலான் மஸ்க் ஒப்பன்ஏஐ மைக்ரோசாப்ட் நிறுவனத்தை முழுமையாக சாப்பிட்டுவிடும் என தெரிவித்தார். எலான் மஸ்க் சொன்னது போலவே தற்போது ஜிடிபி-5 இணைக்கப்பட்ட பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜிடிபி-5 இணைப்பின் காரணமாகத் தான் இந்த சேவை முடக்கும் நடந்துள்ளது என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆயினும் சமுக வலைத்தளத்தில் எலான் மஸ்க் டிவீட்-ஐ பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+