உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் கடந்த 2 வருடத்தில் 10000 பேருக்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து பெரும் தொகையை சேமித்த நிலையில், கடந்த சில மாதங்களாக தனது கிளை நிறுவனங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேம்படுத்தி வருகிறது.
இதேபோல் மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ள ChatGPT சேவைகளை நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் பயன்படுத்த துவங்கப்பட்ட நிலையில் பணிகளை எளிதாக முடிக்கப்டுவது மட்டும் அல்லாமல் எளிதாக மேம்படுத்த துவங்கியுள்ளது. இதனால் பல இடத்தில் செலவின குறைப்புகளை மைக்ரோசாப்ட் கையில் எடுத்துள்ளது.

இதன் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ப்ரொபஷனல் சோஷியல் நெட்வொர்க் தளமான லின்கிடுஇன் தளத்தில் சுமார் 700 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவித்த்துள்ளது. இந்த பணிநீக்கம் இந்நிறுவனத்தின் இன்ஜினியரிற் பிரிவில் அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிதியியல் பிரிவுகள் மற்றும் மனிதவள பிரிவுகளிலும் இந்த பணிநீக்கம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லின்கிடுஇன் தளத்தில் கடந்த 8 காலாண்டுகளாக மந்தமான வருவாய் வளர்ச்சி மட்டுமே பதிவு செய்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் கூட 5 சதவீத வளர்ச்சி மட்டும பதிவு செய்துள்ளது. இந்த 2 வருட காலக்கட்டத்தில் மெம்பர்ஷிப் வருமானமும் அதிகரித்துள்ளது, ஆயினும் வருமான வளர்ச்சியில் மந்தமான வளர்ச்சியில் உள்ளதால் மைக்ரோசாப்ட் நிர்வாகம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த பணிநீக்கம் குறித்து லின்கிடுஇன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான மொஹக் ஷ்ராஃப் மற்றும் டோமர் கோஹன் அனுப்பிய மெமோ-வில் 2024 ஆம் நிதியாண்டின் திட்டத்தை செயல்படுத்த நாம் எப்படி பணியாற்ற வேண்டும், எந்த பணிகளை எல்லாம் முன்னுரிமைப்படுத்தி இயங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாகவே 2024 ஆம் நிதியாண்டில் நம்முடைய இலக்குகளை அடைய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஒட்டுமொத்த நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பின் சுறுசுறுப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் வெளிப்படைதன்மையுடனும் அனைத்து தரப்பு ஊழியர்களும் உரிமை மதிப்பீட்டை கொண்டு இருக்க வேண்டும். இதற்கு பணிநீக்கம் அவசியமாக உள்ளது என விளக்கம் கொடுத்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் 2023 ஜனவரியில் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, ஜூலை மாதம் ஒரு பணிநீக்கத்தை அறிவித்தது, தற்போது 3வது முறையாக பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா இந்த பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி பெரிய அளவில் குறைந்தது வருவது தான்.


Click it and Unblock the Notifications