உலகின் டாப் டெக் நிறுவனங்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் முன்னோடியாக விளங்கும் மைக்ரோசாப்ட் மீண்டும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எடுத்துள்ளது.
மைக்ரோசாப்ட் கடந்த 10 வருடத்தில் கிளவுட், கேமிங், விளம்பரம் என பல துறையில் வேகமாக வளர்ச்சி கல்லாக்கட்டி வருகிறது, ஆனாலும் பிற டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் செய்த தவறை மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்துள்ளது.
அதாவது அளவுக்கு அதிகமாக ஊழியர்களை சேர்த்துவிட்டு தற்போது ரெசிஷன் காலத்தில் நிலையை சமாளிக்க முடியாமல் பணிநீக்கம் செய்து வருகிறது.
சத்ய நாடெல்லா - மைக்ரோசாப்ட்
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் ஆரம்பம் முதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் எவ்விதமான தயக்கத்தையும் காட்டவில்லை 2022ல் மெட்டா பணிநீக்கம் அறிவிக்கும் போதே 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் 2023ல் அமேசான் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட பின்பு 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
ரெசிஷன் அச்சம்
உலகளவில் ரெசிஷன் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல முன்னணி டெக் நிறுவனங்கள் 2வது பணிநீக்க சுற்றை அறிவிக்க தயாராகியுள்ளது. இதில் முக்கியமாக மைக்ரோசாப்ட் தனது உலகளாவிய பணிநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் மட்டும் சுமார் 120 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது புதிய பணிநீக்க அறிவிப்புகளாக உள்ளது.
முக்கிய பிரிவு
அமெரிக்காவின் ரெட்மாண்ட்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஹோலோலென்ஸ், சர்ஃபேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிரிவுகளின் வன்பொருள் பிரிவுகளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
617 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த நிலையில் HoloLens, Surface மற்றும் Xbox பிரிவில் சியாட்டில் நகரத்தில் மட்டும் சுமார் 617 ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த சில ஊழியர்கள் பணிநீக்கக் கடிதங்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
பேஸ்புக்
இதேவேளையில் கடந்த வாரம் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா புதிய பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. மெட்டா-வின் இப்புதிய மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் ஆயிரகணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அதிகாரிகள்
இந்த முறை பேஸ்புக் HR, வழக்கறிஞர்கள், நிதியியல் வல்லுனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஆட்குறைப்பு மற்றும் செலவு குறைப்புக்கான ஐடியாவை கேட்டு உள்ளது. இதேவேளையில் பேஸ்புக் பல உயர் அதிகாரிகளின் பதவியை கீழ் இறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் பேஸ்புக் சுமார் 13 சதவீத ஊழியர்களை பணிநிக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications