மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைய இருக்கும் தலைநகர் அமராவதிக்கு அருகே 25 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது.
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து தலைநகர் அமராவதியை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற அமைச்சர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அமைச்சர் நர லோகேஷ் அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் செய்து பல்வேறு முன்னணி டெக் நிறுவன தலைவர்களை சந்தித்து ஆந்திர பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகருக்கு அருகே நந்திகாமா என்ற நகரில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது. 181 கோடி ரூபாய்க்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமராவதி நகரத்திலிருந்து ஒரு மணி நேரத்திலேயே இந்த இடத்திற்கு பயணம் செய்துவிடலாம். நேட்கோ பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பத்திரப்பதிவுக்காக முத்திரைத்தாள் கட்டணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 9.96 கோடி ரூபாயையும் , பதிவு கட்டணமாக 3.62 கோடி ரூபாயையும் செலுத்தி இருக்கிறது. அமராவதில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கக் கூடிய ஒரு நகரம் இது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் நிலங்களின் மதிப்பு கணிசமான அளவு உயர்ந்து விட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நிலத்தை வாங்கி வருகிறது.
புனேவில் சில மாதங்களுக்கு முன்பு தான் 1000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நிறுவனம் 30 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தியது. பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கக்கூடிய பிஞ்சவாடி பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கி இருக்கிறது.
அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் புனேவின் விவா ஹைவேஸ் பகுதியில் 16 ஏக்கர் நிலத்தை 453 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டு இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் 328 கோடி ரூபாய்க்கு புனேவில் நிலத்தை வாங்கியது.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications