ஏஐ தொழில்நுட்பங்களின் வருகை வைட் காலர் வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கோடிங், ஹெச்,ஆர் வேலை, பிபிஓ வேலை என அனைத்தும் படிப்படியாக ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம்: ஏஐ இடமிருந்து எந்தெந்த வேலைகளுக்கு எல்லாம் பாதுகாப்பு இருக்கிறது அதாவது எந்தெந்த வேலைகள் எல்லாம் ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களிடமிருந்து பறிக்க முடியாது என்பது குறித்து மைக்ரோசாப்ட் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது . சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தைக் கொண்டும் நம்மால் ஏஐ தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்க முடியாத அல்லது ஏஐ தொழில்நுட்பத்திடம் முழுவதுமாக ஒப்படைத்து விட முடியாது என மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் இந்த 10 வேலைகள் பாதுகாப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Phlebotomists : மக்களிடம் இருந்து பாதுகாப்பாக ரத்த மாதிரிகளை எடுப்பது அதனை முறையாக பராமரித்து ஆய்வகத்திற்கு கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்துவது இவர்களின் வேலை. மனிதர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது என்பதால் இதனை மனிதர்கள் தான் செய்ய முடியும்.
Nursing assistants: மருத்துவ துறை சம்பந்தப்பட்ட வேலைகளில் செவிலியர் பணி என்பது அத்தியாவசியமானது., நோயாளிகளை கவனித்து கொள்வது அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து அன்புடனும் அர்ப்பணிப்புடனும் மனிதாபிமானத்தோடு செய்யும் வேலை என்பதால் இதனை ஏஐ-ஆல் செய்ய முடியாது.
Ship engineers: கப்பல் போக்குவரத்து முக்கியமான ஒரு போக்குவரத்தாக இருக்கிறது. குறிப்பாக சரக்கு போக்குவரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களின் முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை கையாளும் திறன் கப்பல் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முக்கியம்.

Tire repairers: பொதுவாகவே சக்கரங்களை சரிபார்க்கும் பணிகளை மனிதர்களால் தான் திறம்பட மேற்கொள்ள முடியும். பணி அனுபவம் இதில் முக்கியமானது.
Firefighters: தீயணைப்பு பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் இதில் மிக முக்கியமானது.
Electricians: எலக்ட்ரீசியன் பணிகளில் கட்டாயம் ஏஐ தொழில்நுட்பத்தால் முழுமையாக மேற்கொள்ள முடியாது. இதனை மனிதர்கள் தான் செய்ய முடியும் என மைக்ரோசாப்ட் அறிக்கை கூறுகிறது.
Occupational therapy assistants: மனிதர்களோடு நேரடியாக தொடர்பு கொண்ட வேலைகள் கண்டிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தால் முழுமையாக மேற்கொள்ள முடியாது. அந்த பட்டியலில் இந்த வேலையும் ஏஐ இருந்து பாதுகாக்கப்பட்ட வேலைகளில் இடம்பிடித்துள்ளது.
இது தவிர Pipelayers எனப்படும் குழாய்கள் அமைப்பது, சீர் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் , Roofers எனப்படும் மேற்கூரை வேய்வது அவற்றை சீர் செய்வது போன்ற வேலைகளை செய்பவர்கள் , Carpenters எனப்படும் மர வேலைபாடுகளை செய்பவர்கள் ஏஐ வருகையில் இருந்து தப்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications