AI துறையில் முக்கியமான இரு நிகழ்வுகள் திங்கட்கிழமை அமெரிக்க சந்தையில் நடைபெற்று உள்ளது. ஏஐ துறையில் கிங் மேக்கராக இருக்கும் என்விடியா நிறுவனம் தொடர்புடைய 2 விஷயங்கள் நடந்துள்ளது மூலம் அமெரிக்க பங்குச்சந்தையில் இதன் பங்குகள் சரிவை தழுவியுள்ளது.
என்விடியா-கோர் வீவ்
AI கிளவுட் இன்பாரஸ்டக்சர் சேவை வழங்கும் கோர் வீவ் (CoreWeave) நிறுவனத்தில் என்விடியா கூடுதலாக 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக கோர் வீவ்-ன் Class A பொதுப் பங்குகளை 87.20 டாலர் என்ற விலைக்கு வாங்கியது. இதன் மூலம் என்விடியா கோர் வீவில் இரண்டாவது பெரிய பங்குதாரராக மாறியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து 2030ஆம் ஆண்டுக்குள் 5 கிகாவாட் திறன் கொண்ட AI டேட்டா சென்டர்களை கட்டுவதற்கு இணைய உள்ளது.

இந்த முதலீடு இரு நிறுவனங்களுக்கும் இடையேயான நீண்டகால திட்டத்தை எளிமையாக செயல்படுத்தும், கோர் வீவ் GPU அடிப்படையிலான AI கம்ப்யூட் சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்த கூட்டணி மூலம் என்விடியா புதிய சேமிப்பு அமைப்புகள், CPUகள் போன்ற தயாரிப்புகளை கோர் வீவ் முதலில் பயன்படுத்தும். மேலும் நிலம், மின்சாரம், கட்டுமானம் போன்றவற்றை விரைவாக பெற உதவும்.
இந்த அறிவிப்பால் கோர் வீவ் பங்கு விலை திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்தது.
மைக்ரோசாஃப்ட் Maia 200 AI சிப் அறிமுகம்
மேலும் திங்கட்கிழமை மைக்ரோசாஃப்ட் தனது இரண்டாம் தலைமுறை AI அக்சிலரேட்டர் மையா 200ஐ அறிமுகப்படுத்தியது. இது AI இன்ஃபரன்ஸ் (மாடல் பயன்பாடு) பணிகளுக்கு வடிவமைக்கப்பட்டது. TSMCயின் 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிப் அயோவா மாகாணத்தில் உள்ள Azure டேட்டா சென்டரில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் என்விடியா GPUகளை சார்ந்திருப்பதை குறைக்கவே இந்த சிப் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் சொந்தமாக சிப் தயாரிப்பது மூலம் செலவு குறைப்பு மற்றும் ஹார்ட்வேர்-சாஃப்ட்வேர் இணைப்பை மேம்படுத்துவது எளிதாகும்.
கூகுள் நிறுவனமும் இதேபோன்று TPU என்ற சிப் சொந்தமாக தயாரித்து என்விடியாவை சார்ந்து இல்லாமல் இயங்கி வருகிறது.
என்விடியா பங்கு சற்று சரிவு
என்விடியா முதலீட்டு அறிவிப்பு இருந்தபோதிலும், என்விடியா பங்கு விலை சுமார் 0.4 சதவீதம் சரிந்தது. மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய வாடிக்கையாளர்கள் சொந்த AI சிப்களை உருவாக்குவது என்விடியாவின் ஆதிக்கத்தை குறைப்பதே இன்றைய பங்கு விலை சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications