மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை குறித்தான ஒரு சூப்பரான அப்டேட்டினை கொடுத்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் கால வரையற்ற விடுமுறையை பெற்று அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம்.
அமெரிக்காவினை சேர்ந்த டெக் ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பான ஒரு சூப்பரான அறிவிப்பினை கொடுத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்டின் தலைமை மனிதவள அதிகாரி கேத்லீன் ஹோகன் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், நிறுவனம் விடுமுறை கொள்கையை புதுபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கால வரையற்ற விடுமுறை
இதன் மூலம் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் ஜனவரி 16ம் தேதிக்கு பிறகு கால வரையற்ற விடுமுறையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை திட்டத்திற்கு DIscretionary time off என தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பின் படி அவசியமான காலகட்டத்தில் ஊழியர்கள் வழக்கமான விடுமுறை தவிர, நோய் சிகிச்சை, சிகிச்சை காலம், துக்க நிகழ்வுகளுக்கான விடுமுறையை காலவரையின்றி எடுத்துக் கொள்ளலாம்.
சம்பளம் கிடைக்கும்
ஒரு வேளை தங்களுக்கு விடுமுறை வேண்டாம் என நினைத்தாலும் அந்த காலகட்டத்தில் சம்பளத்தினை பெற்றுக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் சம்பளத்துடன் விடுமுறை என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா
என்ன? இது உண்மையில் இன்ப அதிர்ச்சி தான்.
நெகிழ்வான அறிவிப்பு
இது குறித்து அமெரிக்காவின் செய்தி நிறுவனமான் தி வெர்ஜ் வெளியிட்டுள்ள செய்தியில், ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மெமோவில், நிறுவனம் விடுமுறை காலத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வை தரும்.
அனைவருக்குமே பொருந்தும்?
வேலைகளை எங்கு எப்படி செய்கிறோம், எப்போது செய்கிறோம் என்பது வியத்தகு முறையில் மாறிவிட்டது. நாங்கள் எங்கள் வேலைகளை நெகிழ்வான முறையில் மாற்றியமைத்துள்ளோம். இதனால் விடுமுறை கொள்கையையும் மாற்றியமைட்துள்ளோம். மைக்ரோசாப்ட்டின் இந்த நெகிழ்வான அறிவிப்பானது அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதில் இருந்து கிடைக்கும்?
ஊழியர்கள் இந்த விடுமுறையை பெற அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 16க்கு மேல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. புதியதாக இணைந்துள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என்பது தான் இன்னொரு ஹைலைட்டே.
ஏப்ரல் மாதம் பணம் கிடைக்கும்
மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பானது ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் தான் இந்த நிறுவனம் பயன்படுத்தாத விடுமுறைகளுக்கும் சேர்த்து ஒரு முறை சலுகையாக பணமாக செலுத்தும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications