உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60000 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றும் திட்டத்தில் சுமார் 27 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த பணிநீக்க சுற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இருக்கும் அனைத்து வர்த்தக பிரிவுகளும், நிர்வாக பிரிவுகளும் அடக்கம் என்பதால் நிறுவனம் முழுவதும் பீதி அதிகரித்துள்ளது.

1000, 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த மைக்ரோசாப்ட் ஓரே நேரத்தில் 60000 ஊழியர்களை பணிநீக்க செய்ய முக்கிய காரணம் இந்நிறுவனம் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா போராட்டம் தான். ஏன் இத்தகைய கடுமையான முடிவு..?
மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவில் மட்டும் அல்லாமல் நிறுவனமாக தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமாயின்.. ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் நிறுவனத்துடன் இத்துறையில் போட்டிப் போட வேண்டுமாயின்.. குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிகப்படியான ஏஐ ஏஜெண்ட்களை பயன்படுத்த வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே வேகமாக வெற்றிக்கு வழிவகுக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் என்டரா பிரிவில் ப்ராடெக்ட் மேனேஜராக இருந்த மெரில் பெர்னாடோ தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள பதிவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல அடுக்குகளில் நிர்வாக அமைப்புகள், தனித்தனி பிரிவாக ஊழியர்கள் என அதிகப்படியான ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது, அதன் இன்னோவேஷனில் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது.
இந்த ஏஐ யுகத்தில் மைக்ரோசாப்ட் போன்ற பெரியளவிலான நிறுவனங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தளத்தைக் கொண்டு வேகமாக முன்னேறவில்லை என்றால் ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் போன்ற முன்னணி ஏஐ நிறுவனத்துடன் போட்டிப் போட முடியாமல் பின்தங்கிவிடும் என மெரில் பெர்னாடோ தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ராடெக்ட்-களில் இருக்கும் பொதுவான பாதுகாப்பு குறைபாடுகளை இன்றளவும் தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பல அடுக்கு நிர்வாகக் கட்டமைப்புகள் தான்.
டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் செய்த முதல் பணி.. நிர்வாக அடுக்குகளை உடைத்து வேகமாக இயங்கக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியது தான். சமீபத்தில் கூகுளின் மெகா பணிநீக்க திட்டத்தில் கூட நிர்வாகக் கட்டமைப்புகளை உடைத்தது கூகுள் நிர்வாகம்.
மெரில் பெர்னாடோ தனது டிவிட்டர் பதிவில், தான் எதிர்கொண்ட பிரச்சனையையும் விவரித்தார். 3 மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக நிறுவனத்தைத் துவங்கும் திட்டத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறிய 2 வாரத்தில் என்னுடைய ஆஸ்திரேலியா அணியை மொத்தமாக மைக்ரோசாப்ட் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் அதிர்ந்து போயினர். இது மிகவும் கொடுமையாக இருந்தது எனத் தெரிவித்தார்.
உண்மையில் மைக்ரோசாப்ட் போன்ற பெரியளவிலான நிறுவனம் ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் போனவற்றுடன் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமாயின் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களும், அதிகளவிலான ஏஐ ஏஜெண்ட்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications