கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை உடைக்க மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் காலத்தில் இருந்து பல முயற்சிகள் செய்தாலும் தொடர்ந்து தோல்வி மட்டுமே கண்டது, ஆனால் சத்ய நாடெல்லா தலைமையேற்றிய பின்பு முதல் வெற்றி கிளவுட் சேவையில் மைக்ரோசாப்ட் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து கூகுள் நெருங்க கூட முடியாத அளவுக்கு உயர்ந்து நின்றது.
இதன் தொடர்ச்சியாக அடித்து மைக்ரோசாப்ட்-க்கு கிடைத்த வாய்ப்பு AI, இத்துறையில் கூகுள்-ஐ ஓட ஓடவிரட்டப் பொன் முட்டையிடும் வாத்தாக ChatGPT-யின் OpenAI கிடைத்தது. இதற்கிடையில் OpenAI நிர்வாகத்தில் நடந்த தடுமாற்றத்தில் மைக்ரோசாப்ட் ஸ்கோர் செய்தது மட்டும் அல்லாமல் வாழ்நாள் தோழனாக மாறியது.

OpenAI சாம் ஆல்ட்மேன்-க்காக உருவாக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவின் தலைமை பொறுப்புக் காலியாக இருந்த நிலையில் சத்ய நாடெல்லா தந்திரமாக யோசித்து முஸ்தபா சுலைமான் என்பவரை நியமித்துள்ளது. யார் இந்த முஸ்தபா சுலைமான் என்பது தான் டெக் உலகின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
இதேபோல் சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட்-ன் எதிர்காலம் எனக் கூறப்படும் ஏஐ பிரிவின் சிஇஓ-வாக முஸ்தபா சுலைமான்-ஐ நியமிக்கக் காரணம் என்ன..? இவருக்கும் சுந்தர் பிச்சை தலைமைவிகிக்கும் கூகுள்-க்கும் என்ன தொடர்பு..?
மைக்ரோசாப்ட் AI சேவையின் சக்தியை OpenAI நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிலையில் இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது, எப்படிப் பணமாக்குவது என்பதில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் கூகுள் கில்லியாக இருப்பது மைக்ரோசாப்ட்-ன் பின்னடைவு.
இந்தச் சாவலை சமாளிக்க ஏஐ துறையில் அனுபவம் பெற்ற கூகுள் அதிகாரி ஒருவர் மைக்ரோசாப்ட்-க்கு தேவை, அவர் தான் இந்த முஸ்தபா.
கூகுள் நிறுவனத்தின் AI வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது DeepMind என்ற நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரியும், 2014ல் கூகுள் கைப்பற்றிய லண்டன் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இந்த டீப்மைண்ட். தற்போது ஓப்பன்ஏஐ, டிவிட்டர் கோர்க், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என நிறுவனங்களில் டீப்மைண்ட் ஊழியர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்.
அந்த வகையில் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா டீம்மைண்ட் நிறுவனத்தை உருவாக்கிய முஸ்தபா சுலைமான் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான கரேன் சிமோனியன் ஆகிய இருவரையும் மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவின் சிஇஓ மற்றும் தலைமை ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்த்துள்ளார்.
இது கூகுள் நிறுவனத்தின் ஏஐ பிரிவின் அடிமடியில் கைவைப்பதற்குச் சமம். சுந்தர் பிச்சைக்கு இனி காத்திருக்கும் சவால் ஏராளம். முஸ்தபா சுலைமான் மற்றும் கரேன் சிமோனியன் இணைந்து 2010ல் டீப்மைண்ட் நிறுவனத்தை உருவாக்கினர், 2014ல் கூகுள் கைபற்றிய நிலையில் இருவரும் 2022 வரையில் கூகுள் உடன் பயணித்த நிலையில்...

2022ல் இருவரும் ராஜினாமா செய்துவிட்டு Inflection AI என்ற பர்சனல் ஏஐ அசிஸ்டென்ட் சேவையை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கினர், 2023 ஆம் ஆண்டு மே மாதம் Pi என்ற சேவையை அறிமுகம் செய்து பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிறுவனத்திலும் மைக்ரோசாப்ட் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, இதன் வாயிலாகத் தான் இருவரையும் தற்போது சத்ய நாடெல்லா ஈர்த்துள்ளார்.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிபுணர் முஸ்தபா சுலைமான் டுவிட்டரில் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்க இருப்பதாகவும், இதன் மூலம், Copilot, Bing மற்றும் Edge போன்ற நுகர்வோர் சார்ந்த அனைத்துச் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கும் அவர் தலைமை தாங்குவார் என்று தெரிவித்தார்.
முஸ்தபா சுலைமானுடன் இணைந்து பணியாற்றிய நீண்ட கால நண்பர் கரேன் சிமோனியன் இந்தப் புதிய பிரிவின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது திறமையான குழு உறுப்பினர்களில் பலரும் மைக்ரோசாஃப்ட்டில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
இந்த மாற்றத்தின்போது, முஸ்தபா சுலைமான் முன்னதாக இணை நிறுவனராக இருந்த Inflection AI நிறுவனம் புதிய தலைமை செயல் அதிகாரியான டெமிஸ் ஹஸாபிஸின் தலைமையில் தனது பணியைத் தொடரும். மேலும், உலகமெங்கிலும் உள்ள டெவலப்பர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (API) பரவலாகக் கிடைக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான மக்களை AI சென்றடைய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார் முஸ்தபா சுலைமான்.
இந்த அறிவிப்புச் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தத் துறையில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்த இந்த நகர்த்தி உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications