உலகளவில் பொருளாதார மந்தநிலை, தொடர்ந்து வட்டி விகித உயர்வு ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வர்த்தக பாதிப்பு உருவாகியிருக்கும் வேளையில் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என்ற எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதை சமாளிக்க தான் கூகுள் முதல் பைஜூஸ் வரையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் பணிநீக்கம் செய்து வருகிறது.
அமெரிக்க இந்தியரான சத்ய நாதெல்லா தலைமையில் இயங்கி வரும் உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட், ஏற்கனவே 10000த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணிநீக்கம் செய்து வருகிறது.

மைக்ரோசாப்ட் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் Github நிறுவனத்தில் பணிநீக்கம் செய்ததை தொடர்ந்து, தற்போது லின்கிடுஇன் நிறுவனத்தில் சுமார் 716 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகின் முன்னணி மற்றும் பிரபலமான ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் நிறுவனத்தில் சுமார் 20000 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் தற்போது 716 ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் 3.5 சதவீத பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
இதோடு லின்கிடுஇன் நிறுவனத்தின் சீன வேலைவாய்ப்பு தளத்தையும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் மூடியுள்ளது. ஆனாலும் லின்கிடுஇன் தளம் தொடர்ந்து சீனாவில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் நிர்வாகம் அதிகப்படியான நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு இருந்தும் இந்த பணிநீக்க அறிவுப்புகளை வெளியிட்டு உள்ளது.

அதிலும் முக்கியமாக லின்கிடுஇன் நிறுவனம் கடந்த காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது, ஆயினும் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மிகவும் எளிதாகியுள்ளது. இதைவிட முக்கியமாக பல மட்ட ஒப்புதல் அளிக்கும் நடைமுறை இந்த பணிநீக்கம் மூலம் சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் முடிவுகள் வேகமாக எடுக்க முடியும் என லின்கிடுஇன் சிஇஓ ரேயன் ராஸ்லான்ஸ்கை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications