ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல IT ஊழியர்களையும் கதிகலங்க வைத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் சமீபகாலமாக ஏற்படும் பணி நீக்கங்கள் தான். பல முன்னணி IT நிறுவனங்களும் தங்களுடைய வேலையை செய்வதற்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் ஊழியர்களின் தேவையும் குறைந்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த மாதம் முதல் சுயமாக இயங்கும் AI ஏஜென்ட்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இந்த ஆர்டிபிசியல் தொழில்நுட்பத்தை தினசரி வணிக நடவடிக்கையில் பணிபுரிய வைக்க நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் விர்ச்சுவல் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது முதல் சேல்ஸ் லீடுகளை எடுப்பது வரை பல்வேறு பணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தான் AI ஏஜென்ட்களை பயன்படுத்துவது மட்டுமல்லாமல் "Copilot Studio" என்ற ப்ராடக்ட்டையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் சொந்த AI ஏஜெண்டுகளை எந்த கோடிங் திறனும் இல்லாமல் உருவாக்கிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் வாடிக்கையாளர் சேவை மற்றும் விநியோகம் சார்ந்த பணிகளை செய்வதற்கு 10 புதிய விர்ச்சுவல் AI பணியாளர்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா கூறுகையில், இந்த AI ஏஜென்ட்கள் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்க உதவும். பணியிட உற்பத்தித்திறனை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி இந்த AI கருவிகள் நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிக்கும். வீணான நேரத்தை குறைக்கும் மற்றும் அவுட்சோர்சிங்கில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும், இதன் மூலம் பணிபுரியும் ஊழியர்கள் வேறு முக்கியமான பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்த முடியும் என்றும் சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.
Copilot Studio AI ஏஜெண்டுகள் என்று சொல்லப்படுகிற விர்ச்சுவல் ஊழியர்களை எளிதில் உருவாக்கும். இதற்கு எந்தவித கோடிங் சார்ந்த திறனும் தேவையில்லை. இந்த விர்ச்சுவல் ஏஐ முகவர்களை உருவாக்க ChatGPT, OpenAI போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் அடைய வேண்டிய லட்சியங்களை விரிவடையச் செய்கிறது. மைக்ரோசாப்ட் AI-யின் தலைவரான முஸ்தபா சுலைமான் இந்த கருவிகள் ஆரம்ப காலத்தில் பெரிய சவால்களை தந்தாலும், தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இவை பல்வேறு பணிகளைச் செய்யும் என்று கூறியுள்ளார்.
என்னதான் நிறுவனத்தின் பல்வேறு வேலைகளை AI ஏஜென்ட்கள் எளிதில் முடிக்கும் என்றாலும், இதனால் வேலை வாய்ப்பின்மை இன்னும் அதிகரிக்குமோ? என்ற கவலையும் எழுந்துள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications