OpenAI நிறுவனத்தின் சேவைகளை மொத்தமாகப் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட், இந்நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தவும், அதன் சேவைகளை வர்த்தகமாக மாற்றும் முயற்சியில் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் உடன் செய்த செயல்கள் தற்போது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது என்றால் மிகையில்லை.
இவை அனைத்திற்கும் ஆரம்பம் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் OpenAI நிறுவனத்தில் செய்த 10 பில்லியன் டாலர் முதலீடு தான். ஆரம்பம் முதல் சத்ய நாடெல்லா மற்றும் சாம் ஆல்ட்மேன் OpenAI நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை வர்த்தகமாக்கும் முயற்சியில் இருந்தது. ஆனால் இதைத் தொடர்ந்து OpenAI நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த நிலையில் தான் சாம் ஆல்ட்மேன் OpenAI நிர்வாகத்திற்கு முறையாக அறிவிக்காமல் பல பணிகளைச் செய்து இப்போது நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார். உடனே சத்ய நாடெல்லா சாம் ஆல்ட்மேன் உடன் OpenAI நிறுவனத் தலைவர் கிரெக் மற்றும் 3 மூத்த அதிகாரிகளைத் தனது புதிய AI அணியில் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் மைக்ரோசாப்ட் ஏஐ அணி மிகப்பெரிய அளவில் வலிமை அடைந்துள்ளது, டெக் உலகின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என உறுதியான நிலையில் மைக்ரோசாப்ட் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ஈர்த்து இனி வேகமாகப் பயணிக்க உள்ளது.
இதன் எதிரொலியாக மைக்ரோசாப்ட் பங்குகள் திங்கட்கிழமை 2.05 சதவீதம் உயர்ந்து வரலாற்று உச்ச அளவான 378.87 டாலரை தொட்டு சந்தை மதிப்பு 2.81 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2023ல் மட்டுமே மைக்ரோசாப்ட் பங்குகள் சுமார் 57.54 சதவீத வரையிலான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
மறுமுனையில் OpenAI நிறுவனத்தின் சுமார் 505 ஊழியர்கள், நிறுவனத்தின் இயக்குநர்கள் நிர்வாகக் குழுவில் இருந்து விலகத் தவறினால், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டிக் கையெழுத்திட்ட அறிக்கையை நிர்வாகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து உள்ளனர்.

சத்ய நாடெல்லா கிளவுட் சேவையிலும், கேமிங் துறையிலும் ஆதிக்கம் செலுத்த என்னவெல்லாம் செய்தாரோ, அதை விடவும் பெரிய கேம்-ஐ ஏஐ துறைக்காகச் செய்துள்ளார். OpenAI நிறுவனத்தில் செய்த 10 பில்லியன் டாலர் முதலீடு தற்போது இந்நிறுவனத்தில் ஆதிக்கம் கிடைத்தது மட்டும் அல்லாமல் இதன் நிறுவனர்களையும் கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அடுத்த சில நாட்களில் மைக்ரோசாப்ட் 3 டிரில்லயன் டாலர் சந்தை மூலதனத்தை அடைந்தாலும் வியப்பில்லை. மைக்ரோசாப்ட் பங்குகள் உயர்வது மூலம் சத்ய நாடெல்லா சொத்து மதிப்பும் பெரிய அளவு உயரும், காரணம் இவரிடம் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகள் இருப்பது தான்.


Click it and Unblock the Notifications