டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் மூலம் பயமுறுத்திய பல முன்னணி நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் முக்கியமான ஒன்றாக இருக்கும் வேளையில், புதன்கிழமை (ஜன.25) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியச் சேவை தளமான டீம்ஸ் மற்றும் அவுட்லுக் மெயில் ஆகியவை இந்தியாவில் பல ஆயிரம் பேருக்குப் பயன்படுத்த முடியாமல் முடங்கியது.
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரும் சிக்கலாக மாறியது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு நெட்டிசன்கள் டிவிட்டரில் அதகளப்படுத்தியுள்ளனர்.
இந்தியா
இந்தியாவில் அனைத்துத் தரப்பு ஊழியர்கள் மத்தியிலும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் மெயில் ஆகியவை தினசரி பணியில் அதிகம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும் வேளையில் இச்சேவைகள் முடங்கிய பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஈமெயில், சாட்
இவ்விரு சேவைகள் முடங்கியதால் ஈமெயில், சாட் செய்ய முடியாமல் போனது. இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டுமே இருந்து குறிப்பிடத்தக்தது, மேலும் 3500க்கும் அதிகமானோர் இந்தியாவில் Microsoft Teams மற்றும் Outlook Mail பயன்படுத்த முடியாமல் போனது.
மைரோசாப்ட் 365
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிர்வாகம் தனது மைரோசாப்ட் 365 ஸ்டேட்டஸ் என்னும் டிவிட்டர் பக்கத்தில், நாங்கள் இந்தப் பிரச்சனையைக் குறித்து ஆய்வு செய்து வருகிறோம், மைக்ரோசாப்ட் 365 ப்ராடெக்ட்களில் பல இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது, மேற்படியைத் தகவல்களை அட்மின் சென்டர் MO502273 கீழ் பெற முடியும் எனத் தெரிவித்து 45 நிமிடத்தில் நெட்வொர்கிங் பிரச்சனை இருந்தது அதைச் சரி செய்துவிட்டோம், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என டிவிட்டரில் விளக்கம் கொடுத்தது.
நெட்டிசன்கள்
இந்த நிலையில் நெட்டிசன்கள் செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்த காரணத்திற்காகத் தான் தற்போது சேவை முடங்கியுள்ளது, உனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் என்ற தொனியில் கிண்டலாகப் பல பதிவுகளைச் செய்துள்ளனர்.
மேனேஜர் ரியாக்ஷன்
மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லை. இதுதான் எங்களுடைய மேனேஜர் ரியாக்ஷன்
நடுவில் இருப்பவரை உங்க மேனேஜர் என நினைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும் இந்த மீம்.
என்ன ஒரு நடிப்பு
அய்யோ மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லையா..? ஆனா என்னுடைய நிஜமான ரியாக்ஷன் இதுதான்
பணிநீக்கமா..?
மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லை, அதுக்குள்ள இங்க பல பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதா புலம்புகின்றனர்
கஷ்ட காலம்
டிவிட்டருக்குப் படையெடுப்பு
மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடங்கியதா என அனைவரும் டிவிட்டரில் செக் செய்து கொண்டு இருக்கிறார்கள்
அது சரி.. மைக்ரோசாப்ட் மெயின்டனனென்ஸ் ஊழியர்களையுமா பணிநீக்கம் செய்துள்ளது..?
மைக்ரோசாப்ட் டீம்ஸ் கோடிங்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கம் நடக்குது, இதேநேரத்தில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் பணியாற்றவில்லை.
போகும் போது யாரவது மைக்ரோசாப்ட் டீம்ஸ் கோடிங்-ஐ டெலிட் செய்துவிட்டார்களா என்ன..?
ஏமாற்றம்
மைக்ரோசாப்ட் இப்போ இப்படித் தான் ஏமாற்றி வருகிறது
அழ கூடாது
அழ கூடாது டா செல்லம்.. அட எல்லாம் நடிப்புப் பாஸ்..
கொண்டாட்டம்
இது தான்டா சொர்க்கம்.. எத்தனை பேர் மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடங்கியதை இப்படிக் கொண்டாடி தீர்த்தீர்கள்
மைக்ரோசாப்ட் ஊழியர்கள்
பணிநீக்கத்திற்குப் பின் மீதமுள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிலைமை இதுதான்
ஆடலும் பாடலும்
போடுறா வெடிய.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்திட்டாங்க
SLACK சோகம்
அலுவலகத்தில் தற்போது மைக்ரோசாப்ட் டீம்ஸ் பயன்படுத்தாமல் SLACK பயன்படுத்துவோர் ரியாக்ஷன்
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications