உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தநிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள நியூ ஆல்பனி, ஹீத், மற்றும் ஹீப்ரான் ஆகிய இடங்களில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான டேட்டா சென்டர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் வரிகள் காரணமாக ஏற்பட்ட செலவு உயர்வுகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.
இந்த அறிவிப்பு, ஓஹியோ மாநிலத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று மைக்ரோசாஃப்ட் உறுதியளித்த சில மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது என Columbus Dispatch தெரிவித்துள்ளது. அந்த முதலீட்டுத் திட்டம், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.ஆனால் தற்போது, செலவு உயர்வுகள் மற்றும் வரி காரணிகளால், திட்டம் தற்காலிகமாக தள்ளிப் போயுள்ளது.

அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கட்டணங்கள்: ஓஹியோ திட்டத்திலிருந்து மைக்ரோசாஃப்ட் விலகுவது, தற்போது தொழில்நுட்ப துறையில் காணப்படும் ஒரு பெரிய போக்கின் பகுதியாகும். மேலும், பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், AI தொடர்பான கடுமையான முதலீட்டு செலவுகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் விதித்த இறக்குமதி வரிகள் கூட சேர்ந்து, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு 34%, தைவானுக்கு 32% மற்றும் தென் கொரியாவிற்கு 25% உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உபகரண சப்ளையர்கள் மீது அதிக வரிகளை அறிவித்தார், அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துக்கும் 10% அடிப்படை வரியை விதித்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப் அறிவிப்புக்குப் பிறகு, தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மிகக் கணிசமாக விலையுயர்ந்ததாக மாறும் என்பது உறுதி என்று D.A. டேவிட்சன் நிறுவனத்தின் பகுப்பாய்வாளரான கில் லூரியா தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலதனச் செலவுகள் மாற்றியமைப்பு: தொழில்நுட்ப மதிப்பீட்டுத் துறைகளில் முதலீடு செய்யும் பெருநிறுவனங்கள் தங்களின் மூலதனச் செலவுகளை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது. ஏஐ அமைப்பும், நுகர்வோர் தொழில்நுட்பத்திலும் முக்கிய பங்காற்றும் நிறுவனங்கள், விரிவாக்கத்திலிருந்து பாதுகாப்பு மற்றும் மாற்றங்களை நோக்கி தற்காலிக செலவுகளை மாற்ற வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சி நிறுவனமான எவரெஸ்ட் குழுமத்தின் கூட்டாளியான அபிஷேக் சிங் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் பொருளாதார திட்டத்தின் தாக்கம்: மைக்ரோசாஃப்ட் தற்போது ரத்து செய்த திட்டம், கட்டுமான செலவுகளுக்கான 700 மில்லியன் டாலர் மற்றும் இயந்திரச் செலவுகளுக்கான 300 மில்லியன் டாலர் முதலீட்டைச் செய்யப் போவதாக இருந்தது, மேலும் கட்டுமானம் ஜூலை மாதத்தில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டது. மேலும், இந்த திட்டம் 400 கட்டுமான வேலைகளை மற்றும் நூற்றுக்கணக்கான முழு நேர வேலைகளை உருவாக்கும் என்று கூறப்பட்டது என்று டெய்லி மெயில் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை மற்றும் பயன்பாட்டு மேம்பாடுகளுக்கு நிதியளிக்கவும், நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என்று கூறவும் மைக்ரோசாப்ட் அதன் மேம்பாட்டு ஒப்பந்தங்களைப் பின்பற்றும் என்று அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications