அமெரிக்கா: மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க தங்களின் கவனத்தை செயற்கை நுண்ணறிவு பக்கம் திருப்பியுள்ளன.
எனவே எந்தெந்த வேலைகளுக்கு எல்லாம் செயற்கை நுண்ணுறிவுகளை பயன்படுத்த முடியுமோ அவற்றுக்கு தங்களால் இயன்ற அளவு செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக நிறுவன மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஊழியர்கள் பணி நீக்கம் என்பது நடைபெற்று வருகிறது.

மைக்ரோசாப்டை பொறுத்தவரை Azure பிசினஸ் பிரிவினை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இதில் பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக ஆப்பரேட்டர்ஸ் மற்றும் மிஷன் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்தவர்கள் தான் தற்போது பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின் படி சுமார் 1500 பேர் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அரசுகளுக்கான கிளவுட் சேவைகள் போன்றவற்றிற்காக இந்த பிரிவினை கடந்த 2021 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது.
தற்போது மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்து இயங்க தொடங்கிவிட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 2024இல் ஆக்டிவிசன் பிளிஸார்டு மற்றும் எக்ஸ் பாக்ஸ் பிரிவுகளில் இருந்து ஜனவரியில் 1900 பேரை பணி நீக்கம் செய்தது.
அதே போல கூகுள் நிறுவனம் கூட 2024இல் 1,500 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. விற்பனை பிரிவினை சேர்ந்த 1000 பேர், மூன்சூட் எக்ஸ் லேப்பை சேர்ந்த 500 பேர் பணிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் 89,333 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளன. சிக்கன நடவடிக்கை, நிறுவன மறுசீரமைப்பு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 40,000 பேர் வரை பணியை இழந்துள்ளனர். டெல், தோஷிபா, ஃபிளிப்கார்ட், டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் அடங்கும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications