டெக் துறையில் அதிரடியான பணிநீக்கம் கடந்த 2 வருடமாக இருந்து வரும் வேளையில், 2025ஆம் ஆண்டில் இந்த பணிநீக்கம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் இதை துவங்கி வைத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் 3 முறை பணிநீக்கம் அறிவித்த நிலையில் புதிதாக ஒரு சுற்று பணிநீக்கத்தை 2025ல் அறிவித்துள்ளது.
இந்த முறை மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி, விற்பனை, கேமிங் மற்றும் பயனர் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டு உள்ளது. தற்போதைய பொருளாதார சவால்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணிநீக்க நடவடிக்கைகளுக்கு அடுத்தபடியாக, மைக்ரோசாஃப்டின் முக்கிய வர்த்தக பிரிவாக வளர்ந்து வரும் கன்சல்டிங் பிரிவில் செலவு குறைக்கும் விதமாக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, இதேபோல் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், செலவுகளைக் குறைக்கும் விதமாக, நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மீட்டிங்-ஐ நடத்த கான்பிரென்ஸ் ஹால் புக் செய்வதும், ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கும் பயணம் செய்வதை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மீட்டிங் அனைத்தும் ரிமோட் ஆக்சல் முறையில் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் ஊழியர்களின் பயண செலவுகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் மார்கெட்டிங் மற்றும் எக்ஸ்டர்னல் ரிசோர்ஸ் பிரிவில் ஏற்படும் செலவுகளை 35% குறைக்கப்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட், இந்நிறுவனத்தில் சிஇஓ சத்ய நாடெல்லா தலைமையிலான இந்த முடிவு மாறிவரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆக்டிவிஷன் ப்ளிசார்டை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கேமிங் பிரிவிலும் 1,900 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மறக்க முடியாது. இதை தாண்டி பல முறை சிறிய அளவிலான பணிநீக்க நடவடிக்கைகள் துறைவாரியாகவும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications