பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ திறன் கொண்ட Qualcomm சிப்புகள் பொருத்தப்பட்ட லேப்டாப்களை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் நிறுவனம் வெளியிடக்கூடிய லேப்டாப் மற்றும் டேப்லெட்டில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிப்புகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் இத்தகைய நவீன சாதனங்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் குறைந்த விலையில் இதனை விற்பனை செய்கிறோம் என அறிவித்துள்ளது.

இதன்படி Surface சீரிஸில் வெளியாக கூடிய 13 அங்குலம் கொண்ட இந்த லேப்டாப்பின் விலை 899 டாலர்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 76 , 171 ரூபாய் ஆகும். அதே போல Surface Pro என்ற பெயரில் 12 அங்குலம் கொண்ட டேப்லெட்டையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதன் விலை 799 டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 67,698 ரூபாய் ஆகும். மே 20ஆம் தேதியிலிருந்து இந்த லேப்டாப் மற்றும் டேப்லெட் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டிலுமே Qualcomm இன் snapdragon X Plus சிப்புகள் பொருத்தப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் இவ்வகை திறன் கொண்ட சிப்புகள் பொருத்தப்பட்ட மின்னணு சாதனங்களை விட இது குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகிறது. ஆப்பிள் நிறுவனம் மேக் புக் ஏர் என்ற பெயரில் இத்தகைய சிப்புகள் பொருத்தப்பட்ட லேப்டாப்புகளை விற்பனை செய்கிறது. அதன் விலை 999 டாலர்களாக இருக்கிறது.
பல்வேறு நவீன வசதிகள் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக கணினியின் அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பதை கேட்டு அதன் அடிப்படையில் மாற்றும் திறன் கொண்டதாக இந்த லேப்டாப்கள் இருக்குமாம். மனிதர்கள் உரையாடுவதைப் போலவே கேள்வி கேட்டு மாற்றும் என கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட லேப்டாப்களும் டேப்லட்களும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மைக்ரோசப்ட் நிறுவனம் இதனை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த லேப்டாப்களிலேயே இது குறைந்த எடை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி நீண்ட பேட்டரி காலம் கொண்டதாகவும் இது இருக்குமாம். சி டைப் ஃபாஸ்ட் சார்ஜரிலேயே இந்த லேப்டாப்பை சார்ஜ் செய்து முடியும் விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது விற்பனைக்கு வர இருக்கிறது ஆனால் இதன் விலை குறித்த விவரங்களை மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications