அலுவலகங்கள் தொடங்கி சுய தொழில் செய்பவர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என பலரும் தற்போது மடிக்கணினிகளை பெரிய அளவில் பயன்படுத்துகிறோம். இந்திய அரசாங்கம் இவ்வாறு கணினியை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மைக்ரோசாப்ட்: குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்திருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான மடிக்கணினிகள் மற்றும் கணினிகளில் விண்டோஸ் தான் பிரபலமான ஒரு இயங்குதளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் வாயிலாக தான் நாம் வேர்டு , எக்ஸெல், பவர் பாயிண்ட் உள்ளிட்ட செயலிகள் எல்லாம் பயன்படுத்த முடிகிறது.

அரசு எச்சரிக்கை: இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு தகவலில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மடிக்கணினிகளும் கணினிகளும் மிகப்பெரிய ஹேக்கிங் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறது. இது தனி நபர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹேக்கர்கள் தாக்குதல்: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் மைக்ரோசாப்ட் மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கக்கூடிய பல்வேறு செயலிகளிலும் ஹேக்கர்கள் எளிதாக ஊடுறுவி தாக்குதல் நடத்துவது கண்டறியப்பட்டு இருக்கிறது. ஹேக்கர்கள் மிக எளிமையாக மைக்ரோசாப்ட் செயலிகள் வாயிலாக உங்களுடைய ரகசியமான தகவல்களை திருடிக் கொண்டிருக்கிறார்கள் இதன் மூலம் ரிமோட் முறையில் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய கணினியை செயல்படுத்தும் வாய்ப்பை பெறுகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பட்டியல்: அந்த வகையில் மைக்ரோசாப்டின் எந்தெந்த செயலிகள் எல்லாம் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறது என்ற பட்டியலும் அதில் வெளியிடப்பட்டிருக்கிறது. Microsoft Windows, Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, SQL Server, System Center, Open Source Software, Server Software, Extended Security Updates for legacy Microsoft products, Azure, Apps ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன.
என்ன செய்தால் தப்பிக்கலாம்: விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் இது தொடர்பாக தங்களுடைய பயனாளர்களுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அனைவரும் தங்களுடைய மைக்ரோசாப்ட் செயலிகளை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விண்டோஸ் அப்டேட் செய்துவிட்டு சிஸ்டமை ரீபூட் செய்து கொள்வது உங்களுடைய கணினியையும் உங்களுடைய தனிப்பட்ட தகவலையும் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications