உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு ஒரு புதிய வழிமுறையை கையில் எடுத்திருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டு காலமாகவே டெக் நிறுவனங்கள் பெருமளவிலான ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.
நிறுவன மறு கட்டமைப்பு, சிக்கன நடவடிக்கை, ஏஐ பயன்பாடு என பல்வேறு காரணங்கள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன. அமேசான், மெடா, கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் என முன்னணி நிறுவனங்கள் அனைத்துமே தங்கள் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. நேரடியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் தற்போது அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஒரு புதிய உத்தியை கையில் எடுத்திருக்கின்றன. அதுதான் Voluntary exit program.

அதாவது நிறுவனம் வேலையை விட்டு நீக்காது ஆனால் ஊழியர்களே ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு வேலையை ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இதற்கு ஒரு கால அவகாசம் வழங்கப்படும். அந்த அவகாசம் முடிந்த பின் நிறுவனம் டார்க்கெட் செய்தவர்களை எப்படியும் லே ஆஃப் செய்துவிடும். அதற்கு முன்பு அவர்களாகவே ராஜினாமா செய்வதற்கான ஒரு வாய்ப்பாக தான் இந்த திட்டம் இருக்கிறது.
அந்த வகையில் முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் voluntary retirement buyout program என்ற திட்டத்தை கொண்டு வர இருக்கிறதாம். ஊழியர்கள் தாமாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் இந்த முறையில் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களை தாங்கள் ஆகவே வேலையை விட்டு ராஜினாமா செய்ய வைத்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களுக்கு இப்படி ஒரு திட்டத்தை அறிவிக்க முடிவு செய்து இருக்கிறதாம்.
மற்ற டெக் நிறுவனங்களைப் போலவே மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஏஐ-இல் மிகத் தீவிரமாக பணத்தை முதலீடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் உருவாக்கிய கோப்பைலட் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தான் நிறுவனம் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து இன்னும் தீவிரமாக அந்த பணத்தை ஏஐ-இல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாம், இதற்காக ஊழியர்களுக்கு தாமாகவே வேலையை விட்டு செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த முறை மூத்த ஊழியர்களே டார்கெட் செய்யப்பட்டுள்ளனர். அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதன்படி ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து பணியை ராஜினாமா செய்து ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவில் வேலை செய்யக்கூடிய ஏழு சதவீத ஊழியர்கள் இந்த பிளானின் தங்கள் வேலை ராஜினாமா செய்ய தகுதி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2025 ஜூன் நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 1,25,000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் ஏழு சதவீதம் என்றால் 8,750 பேர் தாங்களாகவே பணியை ராஜினாமா செய்யும் திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
சீனியர் டைரக்டர் லெவல் எனப்படும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஊழியரின் வயதையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கையும் கூட்டும் போது அந்த நம்பர் 70-ஐ கடந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்யலாம். தகுதி பெற்ற ஊழியர்கள் மே 7ஆம் தேதியிலிருந்து தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2023 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அடுத்ததாக கடந்த ஆண்டு சுமார் 15,000 பேரை வேலையை விட்டு நீக்கியது. இந்த சூழலில் மூத்த நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு இப்படி ஒரு புதிய உத்தியை இந்த நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. இவர்களுக்கு கணிசமான நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும் நிறுவன பங்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications

