ஏஐ துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பல துறையில் அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகிறது. இந்த மாற்றத்தின் முதல்கட்ட பாதிப்பாக டெக் ஊழியர்களையே காவு வாங்குகிறது என்பது அதிர்த்தி அளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த 2-3 வருடமாக உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் பகுதி பகுதியாக பல கட்டத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய பணிநீக்க சுற்று துவங்கியுள்ளதாக தெரிகிறது.
உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், OpenAI உடனான பஞ்சாயத்தில் இருக்கும் வேளையில், உலகளவில் தனது ஊழியர்களில் 4% வரை, அதாவது சுமார் 9,100 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சியாட்டில் டைம்ஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

9100 பேர் என்பது மைக்ரோசாப்ட் 2023 முதல் நடத்தி வந்த பலக்கட்ட பணிநீக்கத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையாக உள்ளது. இதுவரையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்தது இல்லை.
மைக்ரோசாப்ட் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை கடைசியாக ஜூன் 2024-இல் வெளியிட்டது. இந்த ரிப்போர்ட்டில் சுமார் 228,000 ஊழியர்களைக் கொண்டிருந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 9100 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது.
இந்த பணிநீக்க சுற்றில் எந்த நாட்டில் எவ்வளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் கட்டாயம் இந்த முறை பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த முறை சேல்ஸ் பிரிவில் அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்கள் பொருளாதார நிச்சயமின்மை காரணமாக இந்த முடிவை எடுத்து வருகிறது. இந்த பணிநீக்க முடிவை மைக்ரோசாப்ட் மட்டும் அல்லாமல் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து பல நிறுவனங்கள் எடுக்கும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் இந்த ஆண்டு ஏற்கனவே மே மாதத்தில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இப்போது, சேல்ஸ் பிரிவில் முக்கியமாக இந்தப் புதிய பணிநீக்கம் நடைபெற உள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள பல பெரு நிறுவனங்கள் இதேபோல் பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, மைக்ரோசாஃப்டின் பணிநீக்கம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது, குறிப்பாக மென்பொருள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் வைத்துள்ளது. இந்தப் பணிநீக்கம், குறிப்பாக விற்பனை மற்றும் டெக் பிரிவுகளில் பணிபுரியும் இந்திய ஊழியர்களை பாதிக்கலாம்.
இந்திய டெக் ஊழியர்களுக்கு இந்தப் பணிநீக்கம் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- பணிநீக்க அச்சம் ஊழியர்களிடையே மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனத்தின் பணிநீக்கம் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
- இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள், குறிப்பாக AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் பணிபுரிவோர், தங்கள் திறமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.
- மூன்றாவதாக, இந்தப் பணிநீக்கம் இந்திய டெக் ஊழியர்களை மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடவோ அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவோ தூண்டலாம்.
இருப்பினும், இந்தியாவின் தொழில்நுட்ப சந்தை மிகவும் வளர்ந்து வருவதால், பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் உள்நாட்டு டெக் நிறுவனங்களிலோ அல்லது பிற உலகளாவிய நிறுவனங்களிலோ வாய்ப்புகளைப் பெறலாம்.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications