பெங்களூரு: இந்தியாவில் Mid size ஐடி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நடுத்தர ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஐடி துறையை பொறுத்தவரை சர்வதேச அளவில் தற்போது மந்தமான நிலை காணப்படுகிறது.
தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஐடி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அண்மைக்காலமாக தங்கள் நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை குறைத்துள்ளன. ஆனால் இதற்கு நேர் மாறாக மத்திய அளவிலான ஐடி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

2023 - 24 ஆம் நிதி ஆண்டில் கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனத்தில் கூடுதலாக 1500 ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 24,726 என அதிகரித்துள்ளது . புனேவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய கேபிட் (KPIT)நிறுவனம் புதிதாக 1843 ஊழியர்களை பணிக்கு எடுத்துள்ளது . அதேபோல சையண்ட் (Cyient) மற்றும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் (Happiest Minds) நிறுவனங்களும் 250க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் சிறிய அளவிலான நிறுவனங்கள் குறுகிய கால ப்ராஜெக்ட்களை தேர்வு செய்து அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கின்றன, மேலும் உள்ளூர் அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். இதனால் பலரும் டிசிஎஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு செல்லாமல் சிறு நிறுவனங்களை நாடுவது தெரிய வருகிறது.
வாடிக்கையாளர்கள் இத்தகைய சிறு நிறுவனங்களை நெகிழ்வு தன்மையுடன் இருப்பவையாக கருதுகின்றன என்கின்றனர் துறை சார்ந்த நிபுணர்கள். அதே வேளையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவை தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளன என சொல்லப்படுகிறது.
2023-24ஆம் நிதியாண்டில் constant currency revenue growth என்பது டிசிஎஸ் நிறுவனத்திற்கு 3.5 சதவீதம், இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1.5 சதவீதம் என என்ற அளவில் தான் அதிகரித்துள்ளது. அதேவேளையில் விப்ரோ நிறுவனத்திற்கு 4.4 சதவீதம் மகேந்திரா நிறுவனத்திற்கு 4.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இது பெரிய வளர்ச்சி இல்லை என சொல்லப்படுகிறது. 2023-24 ஆம் நிதி ஆண்டை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 64,000 என்ற அளவில் குறைந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications