இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் தற்போது வீடுகள் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர். வாழ்க்கையில் எப்படியாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கிறது. ஆனால், அவர்களால் செய்யப்படும் இந்த முதலீடுகள் நிதி முன்னேற்றத்திற்கு காரணமாக இல்லை என்று நிதி ஆலோசகர் ஐஸ்வர்யா ஶ்ரீ கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பலர் வீடு வாங்குவதை ஒரு சொத்து என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது ஒரு கடமை தான். மாதந்தோறும் லோன், பராமரிப்பு செலவுகள், வரி விதிப்பு ஆகியவற்றால் நிதி சுமை அதிகரிக்கிறது. இது நிதி சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

எனவே வீடு வாங்கும் முன், அது சொத்தா, கடமையா என்பதை தெளிவாக புரிந்து கொண்டு வாங்க வேண்டும். உங்களுக்கு வருமானம் தரக்கூடிய சொத்துக்களில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து பணம் ஓரளவுக்கு பெற்றப் பின், பெரிய முதலீடுகள் செய்யலாம்.
ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் மேலும் கூறுகையில், "ஒரு வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக நடுத்தர வர்க்கத்தினர் நினைக்கின்றனர். ஆனால், சொந்த வீடு வாங்குவது என்பது வளர்ச்சி கிடையாது. வீட்டை வாங்குவதால், உடனடியாக அது நிதி முன்னேற்றத்தை தந்துவிடாது. எனவே, வீடு வைத்திருப்பது என்பது வளர்ச்சி அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கும்போது, நீங்கள் கட்டும் மறைந்த செலவுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஸ்டாம்பு டூட்டிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சமும், ஜிஎஸ்டி ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சமும், பதிவுக்கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சமும், இ.எம்.ஐ. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்திற்கு மேல் செலவாகும்.
நீங்கள் செலவிடும் ரூ.50 லட்சம் பணம் உங்களுக்கு உடனடி வருமானத்தை தருவதில்லை. வீட்டின் மதிப்பு உயரும் வரை இந்த பணம் உழைத்து வருமானம் தராத முதலீடாகவே இருக்கிறது. எனவே, ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பதால் நீங்கள் செல்வம் சேர்த்துவிட்டீர்கள் என்ற நினைக்கக் கூடாது. அந்த வீடு உங்களுக்கு மாதந்தோறும் வருமானம் தருகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
பணக்காரர்கள் எப்போதும் வீட்டை வாங்கி காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பணத்தை வேகமாக சுழற்றி லாபம் ஈட்டப் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு புதிய திட்டம் தொடங்கும்போது ஒரு சதுர அடி ரூ.12,000 முதல் ரூ.14,000 விலையில் வாங்குவார்கள். பின்னர், ரூ.18,000 முதல் ரூ.20,000 விலையில் விற்றுவிடுவார்கள். அந்த லாபத்தை கமர்ஷியல் அலுவலகங்கள், பிரபலமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்வார்கள். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதையே மீண்டும் செய்கிறார்கள். இதனால், அவர்கள் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.
சில முதலீட்டாளர்கள் ரூ.60 லட்சம் முதலீடு செய்து, பத்து ஆண்டுகளில் ரூ.5 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். இது ஒன்றும் அதிர்ஷ்டம் அல்ல. திட்டமிட்டு, மீண்டும் மீண்டும் செய்யும் முதலீட்டு நடைமுறை மூலமாகவே சாத்தியமானது.
நடுத்தர வர்க்கம் vs பணக்காரர்கள் : நடுத்தர வர்க்கத்தினர் உணர்வோடு வீடு வாங்குகிறார்கள். வீடு வாங்கியதுமே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். வீட்டை வாங்கியப் பிறகு பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால், பணக்காரர்கள் முதலிலேயே திட்டமிட்டு குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். வீடு எப்போது விற்றால் லாபம் வரும் என யோசிப்பார்கள். விலை ஏறியவுடனே வாங்கிய சொத்தை விற்பனை செய்து விடுவார்கள். எனவே, வீடு வாங்குவதால் மட்டும் வளர்ச்சி ஏற்படாது. அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் தான் வளர்ச்சி இருக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications