தாஜ்மஹால் பேலஸ் இந்தியாவிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்று. இங்கு சென்று ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் இது பலருக்கும் எட்டக்கூடிய கனவாக இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழும் இளைஞர் தாஜ்மஹால் பேலசுக்கு சென்று தனது கனவை நினைவாக்கிக் கொண்டு வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அந்த இளைஞர் தாஜ் ஹோட்டலுக்கு சென்று டீ குடித்துவிட்டு தனது சிறிய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இதை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இவருடைய வீடியோவுக்கு 2 கோடிக்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்துள்ளது.
அட்னான் பதான் என்ற இளைஞர் தாஜ்மஹால் பேலசுக்கு வெளியே இருந்து வீடியோ எடுக்க தொடங்குகிறார். உற்சாகமாக ஹோட்டலின் உட்புறங்களை காண்பிக்கிறார். அதில் அலங்கரிக்கப்பட்ட வளாகம் மற்றும் சுவரில் ஏராளமான பிரபலங்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அதை பார்த்து "தாஜ் உள்ளே இருந்து பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஒரு அரச அரண்மனையில் இருப்பது போல உணர்கிறேன்", என்று பிரமிப்புடன் கூறுகிறார்.

அதன்பிறகு பதான் "Bom Hi-Tea" என்கிற மெனுவை ஆர்டர் செய்கிறார். இதன் விலை என்னவோ ரூ.1800. ஆனால் வரிகளை எல்லாம் சேர்த்த பிறகு ரூ.2,124 செலுத்த வேண்டியுள்ளது. ஒரு கப் டீயுடன் வடை பாவ், சாண்ட்விச், காஜு கட்லி, பட்டர் போன்ற பிற உணவுகளையும் சேர்த்து வழங்குகின்றனர், கேட்பதற்கு மெனு பெரிதாகத் தெரிந்தாலும் டீ சராசரியாக தான் இருக்கிறது. அவ்வளவாக டேஸ்ட் இல்லை என்று ரிவ்யூ வழங்கி அதற்கு பத்துக்கு ஐந்து மதிப்பெண்களையும் தருகிறார்.
இன்ஸ்டா:
வீடியோவின் முடிவில் பதான் தனது அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். வாழ்க்கையில் ஒரு முறையாவது இதுபோன்ற அனுபவத்தை கண்டிப்பாக பெறவேண்டும் என்று வீடியோவை முடிக்கிறார். அவருடைய வீடியோவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது மற்றும் பல பயனர்கள் தங்களுடைய எண்ணங்களையும் கமெண்ட்ஸ் செக்ஷனில் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு பயனர் யாரோ ஒருவர் தன்னுடைய கனவை நிறைவேற்றி அதை இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்வது மிகவும் உற்சாகமளிக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் தனது அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்த விதம் எங்களையும் தொடர்புப்படுத்துகிறது என்று மற்றொரு பயனர் கூறியிருந்தார். இன்னொரு பயனர் வெறும் டீக்கு 2,124 ரூபாயா? இது நிச்சயமாக ஆடம்பரம் தான் என்று பதிவிட்டிருந்தார். சின்ன சின்ன விஷயங்களிலும் பெரிய பெரிய சந்தோஷங்கள் இருக்கிறது என்பதை பதானின் வீடியோ நமக்கு நினைவூட்டுகிறது.


Click it and Unblock the Notifications