சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என ஒவ்வொரு துறையினரும் அவர்களின் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மற்றும் ஐடி துறை நிபுணரான மோகன்தாஸ் பை மிடில் கிளாஸ் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போதைய சூழலில் இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிகபட்ச வரி ஒரு பிரச்னையாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ள மோகன்தாஸ் பை," நமது பிரதமர் மோடிக்கு சில பின்னூட்டங்கள், இந்தியாவில் தற்போது மிடில் கிளாஸ் மக்கள் மிகவும் கோபமாகவும் அதிருப்தியுடனும் இருக்கின்றனர்.
இதற்கு காரணம் அவர்கள் மீது இருக்கக்கூடிய அதிகபட்ச வரிச்சுமையாகும். வரி அதிகமாக இருப்பது ஒரு புறமெனில் மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு ,வாழ்க்கை தரம் சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்" என சுட்டிக்காட்டி உள்ளார்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரி விதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. தயவு செய்து அதை மாற்றுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் மனித வள துறை இயக்குனராகவும் செயல்பட்டவர். இவர் வருமான வரி விதிப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதேபோல பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் அமைச்ச நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த ஆலோசனைகள், பரிந்துரைகள் , கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தற்போது பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனிடையே புதிய வரி முறையை பயன்படுத்துவோருக்கு வரி விகிதங்கள் மாற்றப்படும் என்றும், நிலையான கழிவுத் தொகையை உயர்த்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications