புத்தாண்டு முதல் பர்ஸை பதம்பார்க்கும் நிறுவனங்கள்.. நடுத்தரக் குடும்பங்கள்

இந்தியாவின் பெரிய உற்பத்தி நிறுவனங்களும், நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களும் இந்த ஆண்டு அதிகப்படியான உற்பத்தி பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே 2 - 3 முறை வரையில் விலையை உயர்த்தியுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டிலும் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

 FMCG நிறுவனங்கள்

FMCG நிறுவனங்கள்

முதல் கட்டமாக உணவு பொருட்களைத் தயாரிக்கும் FMCG நிறுவனங்கள் அடுத்த 3 மாதத்தில் தனது உற்பத்தி பொருட்களின் விலையை 4 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, மாரிகோ மற்றும் இதர நிறுவனங்கள் 2 காலாண்டுகளாக 5-12 சதவீதம் வரையில் விலையை உயர்த்தியுள்ளது.

 சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

2022ல் அறிவிக்கப் போகும் விலை உயர்வின் காரணமாக இந்நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தும் விலை உயர்த்த வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளது. FMCG நிறுவனங்களின் இந்த முடிவு சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும்.

 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் நிறுவனங்கள்

கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் இந்த மாதம் ஏற்கனவே பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி ஆகியவற்றுக்கு 3-5 சதவீதம் வரையில் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த மாதம் மீண்டும் 6-10 சதவீதம் வரையில் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

2020ல் மட்டும் வொயிட் கூட்ஸ் பிரிவு பொருட்களுக்கு 4 முறை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

 

 ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் நிறுவனங்களான மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, வோக்ஸ்வாகன், டோயோட்டா, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை 2021ல் பல முறை தனது கார் மற்றும் பைக் விலையை உயர்த்தியுள்ள நிலையில் மாருதி சுசூகி ஜனவரி 2022 முதல் ஒரு பைக்கிற்கு 2000 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு

உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு

இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வு, ஸ்டீல் விலை உயர்வு, நிலக்கரி விலை உயர்வு, பாமாயில் மற்றும் பேகேஜ் பொருட்களின் 2 மடங்கு விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் தற்போது தொடர்ந்து விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

 நடுத்தர மக்கள்

நடுத்தர மக்கள்

உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தும் அளவிற்கு நடுத்தர மக்களின் வருமானமும், சம்பளமும் அதிகரிக்கவில்லை என்பதால் இந்த விலை உயர்வின் மூலம் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் அதிகளவில் பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+