டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பதால், வரி தாக்கல் செய்யக்கூடிய ஊதியம் பெரும் தனி நபர்கள் அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
குறிப்பாக தற்போது வருமான வரி உச்சவரம்பு என்பது பழைய வரி முறையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய், அதுவே புதிய நடைமுறையில் வரி தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாய்.

அதாவது ஆண்டுக்கு இவ்வளவு சம்பாதிப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை . இந்த நிலையில் புதிய வரி முறையை தேர்வு செய்திருப்பவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பினை அரசு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
அடுத்ததாக புதிய வரி நடைமுறையில் 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 20% வருமான வரியும், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வருமான வரியும் விதிக்கப்படுகிறது. இதனை 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25% வரி என குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய வரி நடைமுறையில் பழைய வரி நடைமுறையில் கிடைக்கக்கூடிய வீட்டு வாடகை அலொவென்ஸ் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டி செலுத்துதல் ஆகியவற்றுக்கு எந்த வரிச்சலுகையும் கிடைப்பதில்லை. எனவே புதிய வரி நடைமுறையில் இவற்றை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது பலரும் வீட்டு கடன் வாங்கி ஈஎம்ஐ செலுத்துவதால் , வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான தொகையை குறிப்பிட்டு வரிச் சலுகை பெறும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.
தற்போது ஈக்விட்டி பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்து ஒரு நிதியாண்டில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவர் மூலதன ஆதாயம் பெறுகிறார் என்றால் அவருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற வரம்பினை 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நிலையான வரிக்கழிவு தற்போது 50,000 ரூபாயாக இருக்கும் நிலையில் அதனை உயர்த்த வேண்டும், காப்பீட்டு பிரீமியங்களுக்காக செலுத்தப்படும் கட்டணங்களுக்கான வரி விலக்கை அதிகப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications